சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வெண்ணிலா கபடிக் குழு’. இதில் விஷ்ணு நாயகனாகவும் சரண்யா மோகன்
நாயகியாகவும் நடித்திருந்தார்கள். கபடி விளையாட்டை மையமாக வைத்து அதில் காதல், காமெடி கலந்து இப்படம் உருவாகியிருந்தது.
தற்போது இப்படம் 'பட்லாபூர் பாய்ஸ்' என்னும் பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் நிஷான் நாயகனாகவும், சரண்யா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தை ஷைலேஷ் வர்மா இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் சரண்யா மோகன் இந்தியில் அறிமுகமாகவுள்ளார்.
இதைப்பற்றி சரண்யா மோகன் கூறும்போது, நான் இந்தியில் அறிமுகமாவது சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தில் நான் சாதாரண டெல்லி பெண்ணாக நடிக்கிறேன். தமிழில் வெளியான ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் திரைக்கதையில் சிறு மாற்றம் கூட இல்லாமல் இப்படம் உருவாகியிருக்கிறது. சில காட்சிகள் மட்டும் சேர்த்திருக்கிறார்கள் என்று கூறினார். இப்படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

கருத்துரையிடுக