ஹனிமூன் செல்லும் முன் கவனிக்க வேண்டியவை

ஹனிமூன் இருமனங்களும் பின்னிபிணைவதற்கு இது ஒரு பாலமாக அமையும். தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கு
இது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை கொடுக்கிறது. ஹனிமூன் பற்றி திட்டமிடும் போது, மனதில் வைத்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்ப்போம். 

1. ஹனிமூன் பற்றி முன்னதாகவே திட்டமிடுதல் அவசியம். முன்னதாகவே திட்டமிடுவதால், கடைசி நேர்த்தில் புக்கிங்க் செய்வதிலுள்ள ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க முடியும். ஹனிமூன் புதுதம்பதியர்களுக்கான ஒரு ஸ்பெஷ்ல் ட்ரிப் என்பதால், அது பற்றிய திட்டமிடுதலை அவர்கள் கையிலே விட்டுவிட வேண்டும். 

2. வானிலை பற்றி அறிந்துகொள்ளுங்கள், இல்லையெனில் வெளியே செல்லமுடியாமல் நேரம் வீணாகிவிடும். நீங்கள் எங்கு செல்ல திட்டமிடுகிறீர்களோ, அந்த இடத்தின் வானிலை பற்றி தெரிந்துகொள்ள மறவாதீர்கள். எப்போது செல்ல திட்டமிடுகிறீர்களோ, அப்போது உள்ள வானிலையை தெரிந்துவைத்துகொள்ளுங்கள். 

3. ஹனிமூன் செல்வற்கு முன்னர் பாஸ்போட்டில் மணமகளின் திருமணபெயர் அப்டேட் செய்யப்படவில்லையென்றால், டிக்கெட்டை அவரது ‘மாரிட் நேமில்’ பூக் பண்ணாதீர்கள், மாறாக திருமணத்திற்கு முன்னர் உள்ள பெயரில் (மெய்டன் நேம்) பூக் செய்யுங்கள். பிரயாணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே, பாஸ்போட் காலவதியாகும் தேதி (எக்ஸ்பைரி டேட்), வீசா, அடையாள அட்டை மற்றும் ஏனைய பிரயாண பத்திரங்களை உறுதிசெய்து கொள்ளுங்கள். 

4. கிரடிட் கார்ட் மற்றும் ட்ராவலெர்ஸ் செக் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், சில சிறிய கடைகளில் பணம் கொடுத்தே பொருள் வாங்க வேண்டியிருக்கும், எனவே கையில் சிறிதளவாவது பணம் (Local currency) வைத்திருப்பது புத்திசலித்தனமாகும். 

5. பாண்டேஜ், அன்டி செப்டிக் ஆயின்மெண்ட், பெயின் கில்லெர் ஆகியவை அடங்கிய ஒரு ‘மெடிக்கல் கிட்’ அவசியம் தேவை. உங்களில் யாராவது மெடிகேசனில் இருந்தால், அந்த மருந்துபொருட்களையும் எடுத்துசெல்ல மறக்காதீர்கள்.

6. ஆண்களே! உங்கள் துணைவிக்கு சர்ப்பிரைஸ் கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்புவீகள் என்பது தெரியும். ஆனால் கடற்கரை உள்ள இடங்களுக்கு செல்லும் போது ஜீன்சோ அல்லது சேலையோ அணிந்து சென்றால் அது உங்கள் மனைவிக்கு திரிலிங்காக இருக்காது. ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கும், மகிழ்சியாக இருப்பதற்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதால், காஷுவல் லூக் தரக்கூடிய ஆடைகளை பாக் செய்வது சிறந்தது. 

7.ஹனிமூனிற்கு செல்லும் போது பெண்கள் கவர்ச்சியான உள்ளாடைகளை எடுத்துச்சென்றால், இருவரும் தங்களை உடல் மற்றும் உணர்வு ரீதியாக வெளிப்படுத்தி தேனிலவு தித்திக்க வழிவகுக்கும். 

8. இன்டெர்னெட் உதவியுடன், ஹனிமூன் பற்றிய தகவல்களை அறிந்து, மனைவிக்கு சர்ப்பிரைஸ் தரக்க்கூடிய சில விஷயங்களை உங்கள் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். தனிமையாக இருக்கக்கூடிய ஒரு அழகான தீவு அல்லது இரவு நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கக்கூடிய வகையில் வாவிக்கரையில் அமைக்கப்பட்ட கூடாரம் (டென்ட்) ஆகியவை உங்கள் ரொமாண்டிக்கான இடங்களாகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget