சின்னத்திரையில் நாயகியான நீலிமா

சின்னத்திரையில் இன்றும் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ராதிகா. அவரே நடித்து, தயாரிக்கும் சீரியல்களுக்கு டி.ஆர்.பியில் தனி
இடம் உண்டு. சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, இளவரசி தொடர்களை தொடர்ந்து அடுத்து அவர் தயாரித்து நடிக்கும் தொடர் தாமரை.

ராதிகா கம்பெனியின் ஆஸ்தான நடிகை நீலிமா ராணி. சில காலம் சின்னத்திரையை விட்டு ஒதுங்கி இருந்த நீலிமாவை இளவரசி தொடர் மூலம் சின்னத்திரைக்கு அழைத்து வந்தார். தற்போது அவர் தயாரிக்கும் தாமரை தொடரில் ஹீரோயினாக்கி விட்டார்.

நீலிமா ராணியுடன் அஸ்வின், சாய்லதா, டி.வி.வரதராஜன், எல்.ராஜா, பபிதா, சாய் பிரசாந்த், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸ்வப்னா, சாம்பவி, ஸ்ரீதர், ராணி, ஜெய்ராம் ஆகியோர் நடிக்கிறார். ராதிகாவின் சகோதரியும் முன்னாள் ஹீரோயினியுமான நிரோஷா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தேவி பாலா கதை மற்றும் திரைக்கதையை எழுதுகிறார், பிரசன்னா வசனம் எழுதுகிறார், விக்ரமன் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.கே.அருந்தவராஜா இயக்குகிறார். ராதிகாவின் ராடான் மீடியா தயாரிக்கிறது.

நடுத்தர மக்களின் வாழ்க்கையில் உறவு சிக்கலையும், வாழ்க்ககை சிக்லையும் சொல்லப்போகும் சீரியல். இதுவரை எந்த சீரியலிலும் கையாளது ஒரு புது பிரச்சினையை எடுத்துக் கொண்டு கதையை நகர்த்த இருக்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget