டோலிவுட் ஹிட்டில் பூஜை

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த 'பூஜை' திரைப்படம், தெலுங்கில் டப்பிங்
செய்யப்பட்டு 'பூஜா' என்ற பெயரில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்னதாகவே சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வியாபாரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஏரியாவும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. ஒரு டப்பிங் படத்திற்கான வியாபாரமாகப் பார்த்தால் அவை நல்ல விலை என்று சொல்கிறார்கள். சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியான 'பூஜா' திரைப்படம் ஒரு வாரத்திற்குள்ளாக விற்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடும் போது அதே அளவு தொகையை 'ஷேர்' ஆக, அதாவது லாபத்தின் பங்காக வசூலித்துக் கொடுத்துள்ளதாம்.

இனி வரும் நாட்களில் வசூலாகும் தொகையும், படத்தின் தெலுங்கு சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளின் உரிமை ஆகியவற்றை கணக்கல் எடுத்துக் கொண்டால் மேலும் சில கோடிகள் லாபத்தைக் கொடுத்திருக்கும் என்கிறார்கள். 'ஏ' சென்டர்களில் 'பூஜா' படத்திற்கு சுமாரான வசூல்தான் கிடைத்தது என்றாலும், 'பி அன்ட் சி' சென்டர்களில் படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்ததாம். விஷால் நடித்து தமிழில் வெளிவந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட படங்களில் இந்தப் படம் மிகப் பெரிய லாபத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இந்த வாரமும் படம் பல ஊர்களில், பல திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget