பேஸ்புக் மெசஞ்சர் ஆதிக்கம் தொடருமா

மொபைல் சாதனங்களில் பேஸ்புக் பயன்படுத்த, பேஸ்புக் மெசஞ்சர் என்னும் டூலினை பேஸ்புக் அறிமுகப்படுத்தி, அதனை அனைவருக்கும்
கட்டாயமாக்கியது. தற்போது, 50 கோடி பேருக்கு மேல் அதனைப் பயன்படுத்தி வருவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இதன் மூலம் மொபைல் சாதனங்களில் அதிக எண்ணிக்கையிலான நபர்களால் பயன்படுத்தப்படும் மெசேஜ் அப்ளிகேஷனாக, பேஸ்புக் மெசஞ்சர் இடம் பிடித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் சாதனைக் கல் என்று பேஸ்புக் இயக்குநர் பீட்டர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் தரும் கம்ப்யூட்டருக்கான முதன்மை மெசஞ்சர் அப்ளிகேஷனை 135 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். 

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் மெசேஜ் அப்ளிகேஷனை 60 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். 
சீனாவின் டென்செண்ட் நிறுவனத்தின் வி சேட் (WeChat) அப்ளிகேஷனை 43.8 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். 

பேஸ்புக் முதலில் மெசஞ்சர் அப்ளிகேஷனைக் கொண்டு வந்த போது, பலரும் எரிச்சல் பட்டனர். எதற்கான மொபைல் சாதனங்களுக்கு மட்டும் என இந்த அப்ளிகேஷனை டவுண்லோட் செய்திட வேண்டும் என எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இன்றும் கூட சிலர் இந்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பேஸ்புக், இந்த புதிய மெசஞ்சர் அப்ளிகேஷனை, பழைய முதன்மை அப்ளிகேஷனலிருந்து பிரிப்பதால், செய்தி தகவல்கள் விரைவாகச் செல்லும் என அறிவித்தது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget