ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனேகன் படத்தின் பாடல்கள் வருகிற 9ம் தேதி வெளியாகயிருக்கின்றன. படத்தின் ஆறு
பாடல்களில் மூன்று பாடல்களை வைரமுத்துவும், சி.எஸ்.அமுதன், கபிலன் வைரமுத்து, ராக்கேஷ் தலா ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்கள். படத்தின் பாடல் வரிகளை இயக்குநர் கே.வி.ஆனந்த் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.
டங்கமாரி என்ற பாடலை தனுஷ் பாடியிருப்பதாக அவர் சொன்னதும் தனுஷ் ரசிகர்களின் மத்தியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. படத்தில் கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும், ''தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே என்ற பாடலின் வரிகளை கே.வி.ஆனந்த் பதிவு செய்திருக்கிறார். அதில் “மாமலை இங்கே மணிச்சிகை இங்கே” என்ற வரிக்கு கீழே ”மணிச்சிகை” என்றால் என்ன என்று கேள்வி கேட்டிருந்தார். பலர் சரியான பதிலுக்கு நெருக்கமாக வந்தும் கடைசியில் அந்தப்பாடலை எழுதிய கபிலன் வைரமுத்துவே அதற்கான பதிலைப் பதிவு செய்தார்.
”சங்க இலக்கியத்தில் கபிலர் பாடிய 99 வகை பூக்களில் மணிச்சிகையும் ஒன்று” என்று அவர் விளக்கம் தந்ததும் “கொஞ்சம் லேட்டா சொல்லியிருக்கலாமே” என்று கே.வி.ஆனந்த் பதில் டுவீட் செய்தார். ஒரு பக்கம் டங்கமாரி பாடல், இன்னொரு பக்கம் தெய்வங்களின் பாடல் என்று பலமுகத்தோடு வெளிவருகிறது அநேகன் இசை.

கருத்துரையிடுக