வால்வெளியில் விண்கலத்தை தரை இறங்கி வரலாற்று சாதனை

ரொசெட்டாவின் ஃபைலீ தரையிறங்கி வெற்றிகரமாக 67பி என்ற வால்வெளியில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. வால்
நட்சத்திரங்கள் தோன்றியது, அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்வதற்காகவும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றி ஆராய்வதற்காகவும் 67பி என்ற வால்வெளிக்கு ரொசெட்டா விண்கலம் 2004 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ரொசெட்டா (Rosetta) விண்கலம் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். ரொசெட்டா விண்கலத்தில் ரொசெட்டா விண்ணாய்வி மற்றும் ஃபைலீ தரையிறங்கி என இரண்டு விண்கலம் உள்ளது. 

ரொசெட்டா விண்ணாய்வி வால்வெளியில் சுற்று வட்டத்தில் சுற்றி வந்து நீண்ட காலத்துக்கு ஆராயும். அதேபோல் ஃபைலீ தரையிறங்கி வால்வெளியின் மேற்பரப்பில் ஆராயும். இரண்டு விண்கலங்களும் பெருமளவு சோதனைகளை நடத்தி, வால்வெளியை பரந்த அளவில் ஆய்வு செய்து பல தகவல்களை பூமிக்கு அனுப்பும். ஒரு ஆய்வு விண்கலம் பத்து ஆண்டுகளுக்கு பிறகு வால்வெளியின் மேற்பரப்பில் தரையிறங்கியது இதுவே முதல் முறையாகும். 

100 கிலோ எடையுடைய ஃபைலீ தரையிறங்கி மணிக்கு 6.6 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது. பூமியில் இருந்து அனுப்பப்பட்ட ரொசெட்டா விண்கலத்தின் ஃபைலீ தரையிறங்கி, 640 கோடி கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வால்வெளியை அடையவதற்கு 10 ஆண்டுகள் ஆனது. புதன்கிழமையன்று ரொசெட்டா விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக ஃபைலீ தரையிறங்கி பிரிந்தது, அதன் பிறகு ஏழு மணி நேரத்திற்கு பின் வால்வெளியில் தரையிறங்கியது. 

ஃபைலி தரையிறங்கி வால்வெளியில் இறங்கியதும், 'நான் வால்வெளியை தொட்டுவிட்டேன், எனது புது முகவரி: 67பி!' என்ற செய்தியை பூமிக்கு அனுப்பி உறுதி செய்துள்ளது. வால்வெளியில் இருந்து வந்த இந்த சிக்னலை கண்டதும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget