லெமன் சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் இறைச்சி – 4 மார்பு துண்டங்கள்
எலுமிச்சை சாறு – 3 மேசைக்கரண்டி
சிக்கன் ஸ்டாக் – 2 கப்
கார்ன்ஃப்ளவர் – 6 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் 4
பச்சை குடை மிளகாய் – 1
வெள்ளை மிளகுத்தூள் – அரை டீ ஸ்பூன்
ஜாதிக்காய் – ஒன்று
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் ( பொரிக்க தனியாக )
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கோழி மார்புத் துண்டங்களாக தேர்ந்தெடுத்து எலும்புகளை நீக்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு மேசைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கோழித் துண்டங்கள் மீது தடவி ஊறவிடவும்.

இரண்டு மேசைக்கரண்டி கார்ன்ப்ளவரை அரை கோப்பை நீரில் கரைத்துக் கொள்ளவும்.

குடை மிளகாயை விதைகளை நீக்கி விட்டு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமான வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் விட்டு, சூடேறியதும் ஊற வைத்துள்ள கோழித் துண்டங்களை கார்ன்ஃப்ளவரிவ் பிரட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு எண்ணெய்யை வடிக்கவும்.

பிறகு ஒரு தவாவில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய், குடை மிளகாய் துண்டங்களைப் போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் வெள்ளை மிளகுத் தூள், உப்பு, ஜாதிக்காய், துருவிய எலுமிச்சைத் தோல், சிக்கன் ஸ்டாக் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளவரை ஊற்றிக் கலந்து மிதமான தீயில் வேகவிடவும்.

குழம்பு கெட்டியானவுடன் பொரித்து வைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு மேலும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும். மீதமுள்ள எலுமிச்சை சாற்றினை ஊற்றிக் கலந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget