இணையத்தில் புது புரட்சி

மொபைல் சேவை வழங்கும் யூனிநார் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களில் 50% பேரை, இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்தத்
தூண்டுவோம் என அறிவித்துள்ளது. அந்த அளவிற்குக் குறைந்த கட்டணத்தில், இணைய சேவையினை வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இணைய இணைப்பு பெற்று, தகவல்களைப் பெற, மொபைல் போன்களே, அதிகம் விரும்பப்படுகின்றன. இது கல்வி, உடல்நலம், வேலை வாய்ப்பு பிரிவுகளில், பெரிய அளவில் சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு சமூக தளங்கள், அப்ளிகேஷன்கள் (பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்றவை) மற்றும் சேவைத் தளங்கள் மூலம் இந்த வகை இணைய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, அடிப்படை மக்களுக்கு, அவர்கள் ஏற்றுக் கொள்ளும் கட்டணத்தில், இணைய இணைப்பினை வழங்குவது அத்தியாவசியமாகிறது. இதனை டெலிநார் குரூப் மேற்கொள்ளும் என, டெலிநார் குரூப் தலைமை அதிகாரி ஜான் பிரெடரிக் அண்மையில் இந்தியா வந்த போது குறிப்பிட்டார். ” அனைவருக்கும் இன்டர்நெட்” என்பதனைத் தங்கள் நிறுவனம் தன் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

இந்திய அரசு கொண்டுள்ள “டிஜிட்டல் இந்தியா” என்னும் திட்டத்தோடு இது இணைந்து செயல்படுத்தப்படும் என்றும், அரசின் இலட்சியம் நிறைவேற, யூனிநார் தரும் திட்டம் பெரிய அளவில் உதவிடும் எனவும் குறிப்பிட்டார். 
தற்போது இந்தியாவில், இணையப் பயனபாடு 25% ஆக உள்ளது. 24.5 கோடி மக்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். வரும் 2017 ஆம் ஆண்டில் இது 50 கோடியாக உயரும் வாய்ப்புள்ளது. தற்போது இணைய இணைப்பானது 70% மொபைல் சாதனங்கள் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. யூனிநார் வாடிக்கையாளர்களில், இது போல மொபைல் போன் வழி இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சென்ற ஆண்டைக் காட்டிலும் 73% உயர்ந்துள்ளது. 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget