பேபி மூன் செல்லும் முன் யோசிக்க வேண்டியவை

பேபி மூன் பயணத்திற்கான முன்னேற்பாடுகள்... 

• உங்களுக்கு பிடித்தமான காலநிலை நிலவும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் தங்கும்
இடத்தை மிக கவனமாக தேர்ந்தேடுங்கள். மிக அருகில் நவீன வசதிகளை கொண்ட மருந்துவமனை இருக்க வேண்டும். 

• நிறைய இடங்களை பார்க்கவும், தொடர்ந்து பயணத்திலே இருக்கவும் விரும்பாதீர்கள். பயணத்தைவிட சவுகரியமாக தனிமையை அனுபவிப்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். 

• சிறிய தூரத்திற்கு கார், அதிக தூரத்திற்கு ரெயிலை பயன்படுத்துங்கள். தொடர்ந்து ஒரே நிலையில் உட்கார்ந்து பயணம் செய்யாமல் சிறிது நேரம் வாகனத்தை விட்டு இறங்கி ரிலாக்ஸ் செய்து மீண்டும தொடரவேண்டும். கார் பயணத்தில் அடிவயிற்றுக்கு தக்கபடி சீட் பெல்ட் பயன்படுத்த வேண்டும். 

• வெளிநாடுகளுக்கு செல்ல விமான பயணமே ஏற்றது. 32 முதல் 36 வாரங்கள் வரை பயணம் செய்யலாம் என்று விமான நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. அதை உறுதி செய்துவிட்டு பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். சிலருக்கு விமானம் தரை இறங்கும் போது அசவுகரியம் தோன்றும். அவர்கள் பேபி மூன் காலத்தில் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும். கப்பல் பயணம் கர்ப்பிணிகள் மேற்கொள்ளக்கூடாது. 

• குளிர் பிரதேசம் என்றால் அதற்கு தகுந்த உடை அவசியம். பொதுவாக பேபிமூனுக்கு பருத்தி  ஆடையே ஏற்றது. அதிக லக்கேஜ் எடுத்துக் செல்லக்கூடாது. 

• பயணத்தில் சிறுநீரைஅடக்கி வைப்பது கர்ப்பிணிகளுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தாகம் இல்லாவிட்டாலும்   அடிக்கடி தண்ணீர் பருகி, சிறுநீர் கழிக்க வேண்டும். 

• புதிய உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ஜீரணம் ஆகும் உணவுகளே சிறந்தது. குளிர்பானங்கள் கூடாது.

• பேபி மூன் மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரின் முழுமையான ஆலோசனையை பெறுங்கள். முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு டாக்டர் குறிப்பிடும் அத்தியாவசிய மருந்துகளையும் கொண்டு செல்லுங்கள். 

• எல்லா கர்ப்பிணிகளுக்கும் பேபிமூன் ஏற்றதல்ல. ஹை ரிஸ்க் பிரக்னன்சி கொண்டவர்கள் தவிர்க்க வேண்டும். எச்.வி. எப். மூலம் கர்ப்பமானவர்களும், ஒன்றுக்கு மேற்பட்ட சிசுக்களை கர்ப்பத்தில் தாங்குகிறவர்களும் பயணத்தை தவிர்ப்பது நல்லது. 

• உங்கள் டாக்டர் பேபிமூன் செல்ல வேண்டாம் என்றாலோ, பொருளாதார நிலை கைகொடுக்காவிட்டாலோ கவலைப்படாதீர்கள். கர்ப்பிணிகள் தாங்கள் இருக்கும் இடத்திலே மகிழ்ச்சியாக பேபிமூனை கொண்டாடலாம். 

குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, உங்களுக்கு பிடித்தது போல் கணவரோடு மகிழ்ச்சியாக வீட்டிலே பொழுதை கழியுங்கள். அருகில் உள்ள பூங்கா, கடற்கரை, தியேட்டர், பொழுது போக்கு இடங்களுக்கு சென்று கர்ப்ப காலத்தை மறக்க முடியாத பொற்காலமாக மாற்றுங்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget