உலர் திராட்சை சாக்லேட் டீ கேக்

தேவையான பொருட்கள்

வெண்ணெய்-200 கிராம்,
பிரவுன் சர்க்கரை-100 கிராம்,
முட்டை-4
சாக்லெட் சிப்ஸ்-200கிராம்,
உலர்திராட்சை-100கிராம்,

வால்நட்ஸ்-5-கிராம்,
ஆரஞ்சு பட்டை-1டீஸ்பூன்
வென்னிலா எசென்ஸ்-1/2டீஸ்பூன்
மைதா மாவு-250 கிராம்,
பக்கிங் சோடா-1/4டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்-1/4டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பொன்னிற சர்க்கரையை கலந்து அதனுடன் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் கலக்கும் இயந்திரத்தை கொண்டு பேஸ்ட் போல  திரித்து கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், சிறிதளவு உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும். முட்டையை ஒரு  பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதை நன்கு அடித்து, திரித்து வைத்துள்ள வெண்ணெய்யுடன் கலந்து இயந்திரத்தை வைத்து முட்டை மாவுடன்  கலக்குமாறு அரைத்து அதனுடன் மைதா மாவு கலவையை சேர்த்து 1டீஸ்பூன் வென்னிலா எசென்ஸ் சேர்த்து மாவை நன்கு அரைக்கவும். 

அதில் ஆரஞ்சு பட்டை, உலர்திராட்சை, வால்நட்ஸ், சாக்லெட் சிப்ஸ் சேர்த்து கிளறிவிடவும். ஒரு சதுரவடிவ பாத்திரத்தில் பேப்பர் போட்டு அரைத்த மாவை அதில் கொட்டி சதுரவடிவை முழுமைபடுத்தவும். பின்னர் அதை மைக்ரோவேவ் அவனில் வைத்து 45 நிமிடம் கழித்து எடுத்தால் சாக்லேட் உலர் திராட்சை டீ கேக் தயார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget