1 பந்து 4 ரன் 1 விக்கெட் சினிமா விமர்சனம்

நடிகர் : வினய் கிருஷ்ணா
நடிகை : ஹசிகா
இயக்குனர் : வீரா
இசை : உமேஷ்
ஓளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து


நாயகன் வினய் கிருஷ்ணாவும் நாயகி ஹசிகாவும் சிவகாசியில் காதலித்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹசிகாவிற்கு அவரது மாமாவான செண்ட்ராயனுடன் பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார்கள். ஹசிகா ஒருநாள் தன் தாயுடன் கோவிலுக்கு செல்கிறாள். அப்போது வினய் கிருஷ்ணாவிற்கு போன் செய்து கோவிலுக்கு வர சொல்லுகிறாள்.

வினய்யிடம் நிச்சயதார்த்தம் நடந்ததை கூறுகிறாள். இதனால் நாம் ஊரை விட்டு சென்றுவிடலாம் என்று கூறுகிறாள். அதன்படி இருவரும் சிவகாசியில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். வினய்யின் நண்பனான ஜீவா ஒரு பங்களாவில் வேலை பார்த்து வருகிறார். இவரின் உதவியை நாடி வினய் மற்றும் ஹாசிகா அங்கு செல்கிறார்கள். பங்களாவில் ஆட்கள் யாரும் இல்லாததால் திருமண ஏற்பாடுகள் செய்யும் வரை பங்களாவில் இருவரையும் தங்க வைக்கிறார் ஜீவா.

அந்த பங்களாவில் அன்று இரவு ஹசிகாவிற்கு பேய் பிடித்து விடுகிறது. இந்த பேய்யின் பிடியில் சிக்கிய ஹசிகா தன்னுடன் இருக்கும் வினய்யை பயமுறுத்துகிறார். இந்நிலையில் வினய் மற்றும் ஹசிகாவை தேடி ஊரில் இருந்து செண்ட்ராயன் மற்றும் உறவினர்கள் இந்த பங்களாவிற்கு வருகின்றனர். இவர்களையும் ஹசிகா பயமுறுத்துகிறார். 

இந்த பங்களாவில் இருக்கும் அனைவரையும் வெளியே செல்லவிடாமல் தடுத்து, தன் கட்டுப்பாட்டுக்குள் பேய் கொண்டு வருகிறது. இறுதியில் இந்த பேய் எதற்காக ஹசிகா உடம்பினுள் வந்தது? இந்த பங்களாவில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன் வினய் கிருஷ்ணா சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் காதல் காட்சிகள் மற்றும் பேய்யிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. நாயகி ஹசிகா பேய் உள்ளே புகுந்த பிறகு அனைவரையும் நடிப்பால் மிரட்டியிருக்கிறார். செண்ட்ராயன் தன் காமெடியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். நண்பராக வரும் ஜீவா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வழக்கமான பேய் கதைகளில் ஒரு பங்களாவை மையமாக வைத்தே படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் இப்படம் அமைந்தாலும் காமெடி கலந்த திரைக்கதையாலும் வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சிகளாலும் பாராட்டு பெறுகிறார் இயக்குனர் வீரா.

திகில் படத்திற்குண்டான திகிலூட்டும் இசையமைத்து மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் உமேஷ். கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ திகில்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget