டிஜிட்டல் உலகில், மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போதும் தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சாதனங்களை மேம்படுத்தி சீரமைத்துக் கொண்டே
இருக்கும் நிறுவனமாகும். மாற்றங்களில் அதிக நம்பிக்கையுடன் இயங்குவது மட்டுமின்றி, அம்மாற்றங்களை நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட்.
அதனால் தான், முற்றிலும் புதிய இலக்குகளுடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. அதன் நோக்கங்கள் மட்டும் சரியாக, மக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்குமானால், டிஜிட்டல் தொழில் நுட்ப உலகத்தில், புதிய புரட்சி ஒன்று ஏற்பட்டிருக்கும். இவ்வுலகின் தொழில் நுட்பத்தின் எதிர்காலம், அதி வேகத்தில் துள்ளிக் குதித்து மாற்றங்களைச் சந்திக்கும் என மைக்ரோசாப்ட் நம்பியது. அதனால் தான், முற்றிலும் மாறுபட்ட செயல்பாடுகளையும், இயக்கத்தினையும் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட்டது. இது வெற்றி பெறும் என நினைத்தது. தொழில் நுட்பத்தின் எதிர்காலம், திரை தொடர் உணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நம்பியது. அதனால் தான், மிகப் பெரிய பட்டன்களுடன் கூடிய திரையைப் பயன்பாட்டிற்குத் தந்தது.
ஆனால், மக்கள் முழுமையான, முற்றிலும் மாறுபட்ட மாற்றத்திற்குத் தயாராக இல்லை என்பதனை வெளிப்படுத்தினார்கள்.
இருப்பினும், குறைந்த பட்ச அளவிலேனும், பயனாளர்கள் பலர் இதனை விரும்பி ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒவ்வொருவரும் தன் விருப்பங்களுக்கேற்ப அமைத்துக் கொள்ள தரப்பட்டிருக்கும் வசதிகளை ஆர்வத்துடன் கவனித்து, பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
ஸ்டார்ட் ஸ்கிரீனில் அப்ளிகேஷனை பின் செய்தல்: நீங்கள் ஏதேனும் புரோகிராம் ஒன்றினை அடிக்கடி பயன்படுத்துகிறீர்களா? சிலர் தங்கள் பணி நாள் முழுவதும் வேர்ட் புரோகிராமினையே பயன்படுத்துவார்கள். சிலர் எக்ஸெல் விரும்பலாம். சிலரோ, கிராபிக்ஸ் அனிமேஷன் புரோகிராமிலேயே மூழ்கிக் கிடக்கலாம். இவர்கள், இந்த புரோகிராம்களை எளிதாகப் பெற்று இயக்க, விண்டோஸ் 8ல், ஒரு வசதி தரப்பட்டுள்ளது. ஸ்டார்ட் ஸ்கிரீனில் இதனைப் பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் மட்டுமின்றி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் பைல்கள் உள்ள போல்டர்களையும் பின் செய்து கொள்ளலாம். இதனால், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் முதல் திரையிலேயே, இவை பெரிய அளவில் காட்சி தருவதனைப் பார்க்கலாம்.
டைல்ஸ்களின் அளவினை மாற்றுக: விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படை நோக்கமே, காட்சிக்குச் சிறப்பாக இதன் தோற்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான். இதுவரை பயனாளர்கள் பார்த்து அறியாத கிராபிக்ஸ் காட்சிகளை திரையிலேயே விண்டோஸ் 8 காட்டுகிறது. ஸ்டார்ட் ஸ்கிரீனிலேயே இது நமக்குப் புரிந்துவிடும். இந்த திரைக் காட்சியை, நம் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள டைல்ஸ்களை, நாம் விரும்பும் அளவுகளில் மாற்றி அமைக்கலாம். இவற்றை, அவை பிரதிபலிக்கும் புரோகிராம் செயல்பாட்டிற்கேற்ப, பல்வேறு அளவுகளில் அமைக்கலாம். அவை, அந்த அப்ளிகேஷன் புரோகிராமின் பல்வேறு செயல் தன்மைகளைக் காட்டும். டைல் அளவினை மாற்றி அமைக்க, வலது மேல் மூலைக்குச் செல்லுங்கள். அங்கு தெரியும் அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பலமுறை கிளிக் செய்கையில், நீங்கள் விரும்பும் அளவிற்கு அது மாறும். நீங்கள் எந்த அளவில் அது இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த அளவு வந்தவுடன் கிளிக் செய்வதை நிறுத்திவிடுங்கள். இது ஒரு பெரிய வசதியாகும். விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் ஒவ்வொருவரும் இந்த டூலை இயக்கிப் பார்க்க வேண்டும்.
ஸ்டார்ட் ஸ்கிரீனை உங்கள் வசப்படுத்துங்கள்: தனிநபர் விருப்பப்படி காட்சி தோற்றத்தை அமைக்கும் வழிகளைத் தருவதில், விண்டோஸ் 8 முதல் இடம் கொண்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் பலர் இதனை உணரவும் இல்லை. பயன்படுத்தவும் இல்லை. ஸ்டார்ட் ஸ்கிரீனுடைய வண்ணம் மற்றும் கட்டங்கள் பிரதிபலிக்கும் கருத்தினை நாம் நம் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். அதே போல, டாஸ்க் பார் மற்றும் திரை சார்ந்த பல விஷயங்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு டாஸ்க் பார் சென்று, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் properties என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து personalize என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் start screen என்பதில் கிளிக் செய்திடவும். இனி உங்கள் விருப்பப்படி இதனை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம், உங்கள் விருப்பப்படிதான், திரை தோற்றம் அளிக்கும்.

கருத்துரையிடுக