மீண்டும் நடிக்க வரும் லிஸி

தமிழில் ‘விக்ரம்’, ‘மனசுக்குள் மத்தாப்பூ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை லிஸி. தமிழில் சில படங்களில் நடித்தாலும், மலையாளத்தில்
ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

இந்நிலையில், கடந்த 1990-ம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்து கொண்டார். கடந்த 24 ஆண்டுகளாக இவர்களது திருமணம் இனிமையாக சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கு இரண்டு வாரிசுகள் உள்ளனர். தற்போது இவர்களுக்கு திருமண வாழ்க்கை கசந்து போன நிலையில், கடந்த டிசம்பர் 1-ந் தேதி இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்திருந்த லிஸி, தற்போது கணவருடனான விவாகரத்து முடிவால் மீண்டும் நடிக்கும் முடிவில் இருக்கிறார். தங்கமீன்கள் படத்தை இயக்கிய ராம் இயக்கும் ஒரு படத்தில் லிஸி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தனது வயதுக்கு ஏற்றபடியான வேடத்தை தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

லிஸியின் இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget