எக்ஸெல்லில் பல ஒர்க்புக்குகளை மூடுவது எப்படி

ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள
செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க் ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள். அதுதான் இல்லை. ஏற்கனவே ஒரிஜினலாக, இறுதியாக எந்த செல்லுக்குச் சென்றதோ, அந்த செல்லுக்குத் தான் செல்லும்.

எடுத்துக் காட்டாக, நீங்கள் அமைத்த ஒர்க் ஷீட் ஒன்றில் H20 செல் கீழாக, இறுதியானதாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் நீங்கள் மூன்று படுக்கை வரிசைகளையும், ஒரு நெட்டு வரிசையினையும் இடையே நீக்குகிறீர்கள். இப்போது Ctrl+End கீகளை அழுத்தினால், கர்சர் G17 செல்லுக்குத்தானே செல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இல்லை. அதற்குப் பதிலாக H20 என்ற செல்லுக்கே செல்லும். இதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் ஏற்படுத்திய மாற்றம், பைலில் பதியப்படாததே ஆகும். எனவே, மாற்றத்திற்கேற்ற வகையில் இறுதி செல் காட்டப்பட வேண்டும் என்றால், பைலை சேவ் செய்தால் போதும். மாற்றத்தின் அடிப்படையில் கடைசி செல்லைக் காட்டும்.

பல ஒர்க்புக்குகளை உடன் மூடிட: எக்ஸெல் புரோகிராமில் செயலாற்றுகையில், ஒர்க்புக் ஒன்றினை மூடுவதற்குப் பல வழிகளை நாம் பின்பற்றுகிறோம். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க் புக்குகளை மூடுவதற்கு என்ன செய்கிறோம்? ஒவ்வொன்றாகத்தான் மூடுகிறோம். இதற்கு ஒரு சுருக்கு வழியினை எக்ஸெல் கொண்டுள்ளது. அது வெளிப்படையாகத் தெரியாததால், நாம் அதனை அறியாமல் இருக்கிறோம். பல ஒர்க்புக்குகளை, ஒரே கீ அழுத்தத்தில் மூட, ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு பைல் மெனுவினைத் திறக்கவும். இப்போது Close என்பது Close All எனக் காட்டப்படும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அனைத்து ஒர்க் புக்குகளும் மூடப்படும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு பைல் மெனு திறந்தால் தான், Close All என்பது காட்டப்படும். இல்லையேல் அது காட்சி அளிக்காது.

ஒர்க்ஷீட் பாதுகாப்பு: எக்ஸெல் புரோகிராமில், ஒர்க் ஷீட்களைத் தயாரிக்கையில், அதன் செல்களில் உள்ளவற்றை நாம் பாதுகாக்க முடிகிறது. ஆனால், பார்மட்டினைப் பாதுகாக்கப் பலர் தவறிவிடுகின்றனர். ஒரு சிலர், செல் உள்ளே உள்ள தகவல்கள் மாறினாலும், பார்மட் எனக்கு அப்படியே இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். டேட்டா குறித்து கவலைப்படாமல், அதாவது அவற்றை விருப்பப்படி மாற்றும் வசதியுடன், பார்மட்டினை மாற்ற இயலா நிலையில் அமைத்திடக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. ஒர்க் ஷீட்டில் உள்ள அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.

2. ரிப்பனில் Home டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. Cells groupல், Format என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், Format Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Format Cells டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

4. Protection டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

5. Locked என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

6. அடுத்து ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.

7. தொடர்ந்து ரிப்பனில் Home டேப் காட்டப்பட்டால், Cells குரூப்பில் Format கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல், Protect Sheet டயலாக் பாக்ஸைக் காட்டும்.

8. Format Cells செக் பாக்ஸில் டிக் நீக்கவும்.

9. அடுத்து டயலாக் பாக்ஸில், எந்த தகவலையும் மாற்றாமல், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget