வாழ்கையில் ஜெயிக்க என்ன செய்யலாம்

குடும்ப உறுப்பினர்கள் ஆகட்டும், அலுவலக மற்றும் நெருங்கிய நண்பர்களை ஆகட்டும் அனைவரையும் ஜெயிக்க வேண்டும் என்றால்
உடனே, அவர்களுடன் எல்லாவற்றுக்கும் போட்டியிட்டு அதில் அடம்பிடித்து நீங்கள் ஜெயித்ததாகக் கூறக்கூடாது. 

உண்மையில் ஒருவரை ஜெயிக்க அவரது மனதில் இடம்பிடிக்க விட்டுக் கொடுக்க வேண்டும். ஈகோ எனும் தான் எனும் எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டாலே போதும்.. நானே உங்களை எல்லாம் விட பெரியவன், சிறந்த அறிவாளி என்ற எண்ணத்தை விட்டுவிட்டு எவ்வளவு சிரியவராக இருந்தாலும் அவர்களது கருத்தையும் கேட்டு ஒரு விஷயத்தில் முடிவெடுக்கலாம். 

எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பதை முதலில் கைவிடுங்கள். எப்போதேனும், யாராவது உங்களை மனம் நோகும்படி கேலி செய்தால் அதனை பொறுத்துக் கொண்டு முடிந்தால் அதில் இருக்கும் நகைச்சுவையை ரசிக்க பழகிக்கொள்ளுங்கள். இதுவே உங்களை படிப்படியாக பக்குவப்படுத்தும். அனைவரையும் மனிதர்களாக மதியுங்கள். 

ஒருவரை அவர் செய்யும் வேலையின் அடிப்படையில் மதிப்பதை தவிர்த்துவிடுங்கள். எந்த பிரச்சனையையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல், மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பார்த்து முடிவெடுங்கள். 

ஏதேனும் பிரச்சனை வந்து பேசாமல் இருக்கும் போது, மற்றவர் தானே வந்து பேச வேண்டும் என்று நினைக்காமல் ஒரு படி கீழே இறங்கிச் சென்று நீங்களே பேச முன் வாருங்கள். இவ்வாறு செய்து வந்தால் அனைவரிடம் நட்பை பெற முடியும். வாழ்க்கையிலும் ஜெயிக்க முடியும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget