ஒவ்வொரு பெண்ணும் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது மறு ஜென்மம் எடுப்பது மாதிரி தான். பெண்களுக்கு இரண்டாவது முறை
கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும். இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில பக்க விளைவுகளும் தலை தூக்கும்.
அதற்கும் முதல் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இருக்காது. முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம், இரண்டாவது கர்ப்பத்தில் பக்க விளைவுகளாக எதிரொலிக்கலாம். இரண்டாவது கர்ப்ப காலத்தில் களைப்பு மிக சாதாரணமாக ஏற்படும். முதல் கர்ப்பத்தில் கூட நீங்கள் இவ்வளவு களைப்பை அடைந்திருக்க மாட்டீர்கள்.
நீங்கள் போதுமான அளவுக்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். முதுகு வலி என்பது எந்த கர்ப்பத்தின் போதும் இயல்பாக வந்து வருத்தும். இரண்டாவது கர்ப்பத்தில் இந்த வலி இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குனியும் போது கூட, முழங்கால்களை மடக்கித் தான் குனிய வேண்டுமே தவிர, முதுகை வளைத்துக் குனியக் கூடாது.
ஒவ்வொரு கர்ப்ப காலத்தின் போதும் இந்தப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் திடீரென்று நரம்புகள் பின்னிக் கொள்ளும். எப்போதும் கால்களை நீட்டி வைத்துக் கொள்வது நல்லது. சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலமும் இதைச் சரி செய்ய முடியும். உங்கள் முதல் கர்ப்பத்தின் போது நீரிழிவு ஏற்பட்டிருந்தால், இரண்டாவது கர்ப்பத்திலும் இது பக்க விளைவாக ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சர்க்கரை எடுத்துக் கொள்வதை அதிகம் குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் நீரிழிவைத் துரத்தியடிக்கலாம். முதல் கர்ப்ப காலத்திலும் ஏற்படுவதைப் போலவே, இரண்டாவது கர்ப்பத்திலும் சகஜமாக வாந்தி ஏற்படும்.
ஆனால், இப்போது அந்த அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கும். அதற்கேற்றவாறு சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சரிவரவில்லை எனில் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

கருத்துரையிடுக