ஜோம்பி பெல்லி சினிமா விமர்சனம்

நடிகர் : அந்தோணி மைக்கேல் ஹால்
நடிகை : டெரைல் ஹன்னா
இயக்குனர் : ஜான் குலேகர்
இசை : ஆலன் ஹவுராத்
ஓளிப்பதிவு : டேமியன் ஹோரன்


அருகருகே வசிக்கும் இரு குடும்பத்தினர் பேயிடம் இருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் கதை. பேய் கதை என்பதற்கு ஏற்ப படத்தில் காட்சியமைப்பும், இசையும் பார்ப்பவர்களை மிரட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு வீட்டில் தந்தை பேட்ரிக், தாய் பேர்டி, தாய் வழி பாட்டி நானா ஆகியோருடன் மகள் ட்ரேசி வசித்துவருகிறார். அதே போல் ட்ரேசியின் நண்பனான பெர்ரி மற்றும் ஆலன் ரக் ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். இரு குடும்பத்தினரும் இரவில் மட்டும் உலவும் பேயால் கொல்லப்படுவதிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். 

யார் தான் பேயாக வந்து தங்களை மிரட்டுவது என்று குழம்புகின்றனர். இதனால் இரு குடும்பத்தினருக்குள் யாரை நம்புவது என்ற குழப்பமும் ஏற்படுகிறது. இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்ததா? இரு குடும்பத்தினரும் பேயிடம் இருந்து தப்பித்தார்களா? பேயாக மிரட்டியது யார் என்பதே மீதிக்கதை.

இதில் தந்தை பேட்ரிக்காக அந்தோணி மைக்கேல் ஹால் நடித்துள்ளார். அவரது மகள் ட்ரேசியாக ராசேல் ஜி. பாக்ஸ், மனைவி பேர்டியாக டெரைல் ஹன்னா, தாய் வழி பாட்டியாக ஷிர்லி ஜோன்சும் நடித்துள்ளனர். அதே போல் பக்கத்து வீட்டில் மகன் பெர்ரியும், அவனது தந்தை ஜோசப்பாக ஆலன் ரக்கும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கொலை நடக்கும் காட்சிகளில் பேட்ரிக்காக நடிக்கும் ஹால் அசத்தலாக நடித்துள்ளார். மனைவியாக நடித்துள்ள டேரைலுக்கு பெரிதாக எந்த வேளையும் இல்லை. ஆனால் அவரது கண்பார்வையற்ற தாயாக வரும் ஷிர்லி ஜோன்ஸ் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ட்ரேசியின் நண்பனான பெர்ரியின் தந்தையாக வரும் ஆலன் ரக்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால் திரைக்கதையில் தான் இயக்குனர் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். கண் தெரியாத ஷிர்லி எப்படி எங்கு சென்றாலும் விளக்கை எடுத்துச்செல்ல முடியும். கண் தெரியாத அவருக்கு எதற்கு விளக்கு. இப்படி லாஜிக்கே இல்லாத காட்சிகளால் படம் தொங்குகிறது. ஆனால் படத்தில் நடித்துள்ளவர்கள் வெளிப்படுத்திய தத்ரூபமான நடிப்பால் படத்தை பார்க்க முடிகிறது. மொத்தத்தில் கதையில் சொதப்பியிருந்தாலும், கதைக்களத்தில் நடிப்பவர்கள் தேர்வின் மூலம் இயக்குனர் ஜான் குலேகர் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில் 'ஜோம்பி பெல்லி' திகில் அறை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget