ரத்தம் சிந்தி நடிக்கும் ஆத்மியா

1998ல் இருந்து 2011 வரை இந்தியா முழுக்க 2 லட்சத்து 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். குடும்பப் பிரச்சினை, கடன்
தொல்லை, மழையின்மை போன்ற பலதரப்பட்ட காரணங்களால் இந்த தற்கொலைகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், 1998ல் விழுப்புரத்தில் நடந்த விவசாயி தற்கொலை சம்பவத்தை மையமாகக்கொண்டு வெப்பச்சலனம் என்ற படத்தை இயக்கியுள்ளார் புதுமுக இயக்குனர் ராயப்ப ராஜா. இவர் கஸ்தூரிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. இந்த படத்தில் சாஷ்வத்-ஆத்மியா ஜோடி சேர்ந்துள்ளனர். இதறகு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, போங்கடி நீங்களும் உங்க காதலும் படங்களை விட இந்த படத்தில் வெயிட்டான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ஆத்மியா.

இப்படத்தில் தனது வேடம் குறித்து ஆத்மியா கூறுகையில், இந்த வெப்பச்சலனத்தில் கலலூரி பெண்ணாக, விவசாயத்துக்கு உதவி செய்வது போல் நடித்திருக்கிறேன். படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் 35 நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்தேன்.நான் இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களை விட இந்த படம்தான் ரொம்ப திருப்தியாக உள்ளது. அந்த அளவுக்கு முக்கியமான வேடம். அதோடு என்னை ரொம்ப அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

மேலும், என்னிடமிருந்த திறமையை முழுசாக வெளியே கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர். அதோடு, எனக்கு நிஜத்தில் சைக்கிள் ஓட்டத் தெரியாது. ஆனால் கதைப்படி நான் சைக்கிள் ஓட்டவேண்டிய காட்சி உள்ளது. அதனால் உதவி இயக்குனர்களை வைத்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். அப்போது யாரும் பிடிக்காமல் சைக்கிள் ஓட்டியபோது, ரெண்டு பிரேக்கையும் நான் பிடித்ததால் சைக்கிள் தடுமாறி கீழே விழுந்தது. அப்போது நானும் சேர்ந்து விழுந்து என் காலின் பெருவிரல் நகத்தில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. ஆனால், நான் விரலில் ஒரு துணியால் கட்டிக்கொண்டு அன்று முழுக்க நடித்தேன். படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் மருத்துவமனைக்கு சென்றேன். அந்த அளவுக்கு இந்த படததின் கதாபாத்திரம என்னை ஈர்த்து விட்டது என்று சொல்லும் ஆத்மியா, அப்படி நான் ரத்தம் சிந்தி நடித்த இந்த வெப்பச்சலனம் படம் எனக்கு கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget