இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பேஷியல் செய்தால் நமது சருமம் போஷாக்குடன் திகழ்வதுடன், சிறந்த பொலிவுடன் திகழும்.
தோலின் இயற்கை தன்மையும் மாறாது. இதற்கென சில குறிப்பிட்ட பொருட்கள் சிறந்த பலனை தருகின்றது.
பேஷியல் செய்வது என்பது சில முக்கிய பணிகளை உள்ளடக்கியது. அதாவது சுத்தம் செய்தல், தேய்ப்பது, மசாஜ் மற்றும் மிருதுவாக்கல் போன்றவையாகும். இவை அனைத்தும் வீட்டிலேயே சிறப்பான முறையில் செய்ய முடியும். முகத்தில் மாசுக்களை சுத்தம் செய்ய நல்ல கொழுப்புடன் கூடிய பால் 2 டேபிள் ஸ்பூன் அத்துடன் அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து ஒரு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாக துடைத்து விட வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக முகத்தை கழுவி விட வேண்டும். ஸ்பிரப்பிங் என்பது முகசருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற செய்ய செயல்படுத்தும் பணி. 2 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த முகத்தில் தேய்த்து விட வேண்டும். இல்லையென்றால் பால் கிரீம் உடன் மூன்று பாதாம் அரைத்து கலந்து தேய்த்து விடலாம்.
எண்ணெய் பசை சருமம் என்றால் தேன் மற்றும் ஓட்ஸ் பயன்படுத்தி கொள்ளலாம். பப்பாளி பழத்தின் சதை பகுதியுடன் பால் கலந்து பசை போன்று கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். மசாஜ் செய்ய ஆரம்பிக்கும் பகுதி கழுத்திலிருந்து தொடங்கி மேலெழுந்தவாராக கன்னப்பகுதிக்கு வரவேண்டும். கன்னத்தில் மசாஜ் செய்ய கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் பயன்படுத்த வேண்டும்.
கன்னத்தில் விரல்கள் சுழற்சி என்பது வலது புறம் மற்றும் இடது புறம் என்றவாறு சுழன்று செய்தல் வேண்டும். கண்ணிற்கு கீழ் மற்றும் புருவங்கள்,. மூக்கு பகுதிகள் போன்வற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் சருமத்திற்கு அப்ரிகோட் பழத்தின் சதைப் பகுதி, தயிர் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து மசாஜ் செய்யலாம்.
மசாஜ் செய்து முடித்த பின் இந்த முகத்தின் மீது சூடான டவலை மேல் மூடி சற்று நேரம் பொருத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் முக சருமத்தில் உள்ள துளைகள் திறந்து போஷாக்கு ஏற்பட முடியும்.

கருத்துரையிடுக