பளபளக்கும் சருமத்துக்கு பலே ஐடியா

ரத்தத்தைச் சுத்திகரித்து, சருமத்துக்கு நிறத்தையும் பளபளப்பையும் தரும் அழகு இளவரசி பீட்ரூட்! இந்த பீட்ரூட் விழுது உங்கள் முகத்தைப்
பளபளப்பாக்கி, பொலிவூட்டும் பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். 

இந்த விழுது 1 டீஸ்பூன், 
பார்லி பவுடர்-1 டீஸ்பூன், 
லெமன் ஜுஸ் - அரை டீஸ்பூன் 

சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 

இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். டீன் ஏஜில் பஞ்சைவிடவும் மென்மையாக இருந்த உங்கள் கைகள் பாத்திரம் தேய்ந்து, துணி துவைத்து சொரசொரவென ஆகிவிட்டனவா? கவலை வேண்டாம். இந்த பீட்ரூட் சிகிச்சையை செய்து வாருங்கள். 

பீட்ரூட் விழுது 1 டேபிள் ஸ்பூனுடன், 
தேன்-1 டீஸ்பூன், 
கிளிசரின்-2 துளி 

கலந்து கொள்ளுங்கள். இதை கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நன்கு காய்ந்த பின்னர் கைகளை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget