மொஸில்லா பயர்பாக்ஸ் புத்தம் புது தகவல்

கடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் நிறுவனத்துடன் தான் கொண்டிருந்த ஒப்பந்தத்தினை, பயர்பாக்ஸ் முறித்துக் கொண்டு விட்டது. அதன் மாறா நிலை
தேடல் சாதனமாக, கூகுள் சர்ச் இஞ்சின் இருந்து வந்தது. இப்போது யாஹூ இயங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இதுவரை பயர்பாக்ஸின் மொஸில்லா நிறுவனம், பல கோடி டாலர்களை ஆண்டு தோறும் பெற்று வந்தது. அதன் வருமானத்தில் 90% கூகுள் தரும் நிதியாகவே இருந்து வந்தது. சென்ற 2013 ஆம் ஆண்டில், மொஸில்லா இந்த வகையில், கூகுள் நிறுவனத்திடம் இருந்து 27.5 கோடி டாலர் பெற்றது. ஆனால், இது குறித்து மொஸில்லா கருத்து வெளியிடுகையில், ஒப்பந்தம் நிறுத்தப்படுவதனால், மொஸில்லாவிற்கு புதியன கண்டறியும் திறன் அதிகமாகும் எனக் கூறியுள்ளது. கொள்கை ரீதியாகவும், கூகுள் நிறுவனத்தைக் குறை சொல்லியுள்ளது மொஸில்லா. தேடல் விவகாரத்தில், பயனாளர்களுக்குக் காட்டப்பட வேண்டிய பதிவுகளை, கூகுள் கட்டுப்படுத்தியே வழங்குவதாக, குற்றம் சாட்டியுள்ளது. இந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தையும் குற்றம் சாட்டியுள்ளது மொஸில்லா.

கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, தன் தேடல் சாதனத்தினை விளம்பரப்படுத்த வேறு பிரவுசர்கள் தேவை இல்லை. கூகுள் குரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும், பிரவுசர்களும் இதற்குப் போதும். தன் தேடல் சாதனத்தை மக்களுக்குக் காட்டிக் கொண்டு செல்ல, ஆண்டு தோறும் பல கோடிக்கணக்கான டாலர் நிதியை, இனி கூகுள் செலவழிக்க வேண்டியதில்லை.

அப்படியானால், மொஸில்லா, இழந்த வருமானத்தை எப்படிப் பெறும்? புதிய தேடல் சாதனமாக யாஹு சர்ச் இஞ்சினைக் கொள்வதற்கு, அந்நிறுவனத்துடன், மொஸில்லா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் இது அமலுக்கு வந்துள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரில் மாறா நிலையில், சர்ச் இஞ்சினாக யாஹு செயல்படும். பொதுவாக, எந்த பிரவுசரும், இந்த தேடல் சாதனத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது. வேறு தேடல் சாதனங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த, பிரவுசரில் வழிகள் தரப்பட வேண்டும். ஆனால், ஒரு பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள், அதில் மாறா நிலையில் தரப்பட்டுள்ள பிரவுசரைத்தான் பயன்படுத்துவார்கள்; மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், யாஹூ, இந்த ஒப்பந்தத்தினை, மொஸில்லாவுடன் மேற்கொண்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து சிலர் கருத்து தெரிவிக்கையில், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், இந்த தேடல் சாதன மாற்றத்திற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளனர். நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் ஆய்வு அமைப்பின் கூற்றுப்படி, ஏற்கனவே, ஆண்டு தோறும் கணிசமான எண்ணிக்கையில் தன் வாடிக்கையாளர்களை, பயர்பாக்ஸ் இழந்து வருகிறது. எடுத்துக் காட்டாக, சென்ற ஆண்டில், இழந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 26%. 

வர இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 34ல் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ரஷ்யாவில், யாண்டெக்ஸ் (Yandex) மாறா நிலை பிரவுசராகவும், சீனாவில் பைடு பிரவுசரும் (Baidu) உள்ளன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget