நிலவைதேடி பிளாக்கை போலவே போலியாக உலா வரும் பிளாக்

நிலவைதேடி வாசகர்களுக்கு அன்பு வணக்கம். இந்த நேரத்தில் இந்த பதிவு முக்கியமானதாக கருதுகிறேன். கடந்த சில தினங்களாக
நமது நிலவைதேடி தளத்தை போன்றே போலியான பிளாக்கை எவனோ உருவாக்கி இருக்கிறான். இவன் பணம் சம்பாரிக்கும் நேக்கத்தில் பிரபலமான பிளாக்குகளின் பெயரில் போலியான பிளாக்கை உருவாக்கி கொண்டிருக்கிறான். 

நேற்று இவன் நமது நிலவு பிளாக்கை போலவே போலியாக உருவாக்கி இருக்கிறான். அச்சு அசலாக நாம் பயன்படுத்து டெம்ப்ளேட் பயன்படுத்தி இருக்கிறான். இவன் தளத்துக்கு சென்றால் பதிவை படிக்க முடியாது. விளம்பரத்தை கிளிக் செய்தால் தான் முழு பதிவையும் படிக்க முடியும் என்று வாசகர்களை ஏமாற்றும் விதமாக பல முன்னணி பிளாக்குகளின் பெயரில் இவன் மோசடி செய்கிறான். 

இவன் பல ஆபாச பிளாக்குகளையும் நடத்துகிறான். இவன் இரண்டு கூகிள் விளம்பர கணக்கை பயன்படுத்துகிறான். இவன் ஆபாச தளத்திலும் இதே போன்று கூகிள் விளம்பரத்தை போட்டிருக்கிறான்.

எனது நிலவு பிளாக்கை போலவே போலியாக உள்ள அந்த இரண்டு பிளாக்குகளின் ஸ்கிரீன் சாட் இணைத்துள்ளேன்.



இந்த தளங்களின் மீது ப்ளோக்கர் மற்றும் கூகிள் விளம்பரத்துக்கும் கம்ப்ளைன்ட் செய்து விட்டேன். நீங்களும் இந்த போலி தளங்களை பார்த்திருப்பிர்கள் என்று நினைக்கிறேன்.

நண்பர்களே நாளை உங்கள் பிளாக்குக்கும் இந்த நிலைமை ஏற்படலாம். எனவே  இந்த மாதிரியான தளங்கள் மீது நீங்களும் கம்ப்ளைன்ட் செய்யுங்கள். அல்லது இதை முடக்க வேறு வழிகள் இருந்தால் தயவு செய்து கருத்து பகுதியில் தெரிவிக்கவும். நன்றி!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget