இப்போதைய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டானது 2.3 டன் முதல் 2.4 டன் வரை எடையுள்ள செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில்
நிறுத்தும் திறன் கொண்டது. இதை 4 டன் எடைக்கு மேம்படுத்தி, ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டாக உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. இது வேறுபட்ட உருவாக்கம் கொண்ட 3 நிலை ராக்கெட்.
இதன் கிரையோ ஸ்டேஜ் 25 டன் எரி பொருள் அளித்து 20 டன் உந்துவிசை பெறுகிற அளவு பெரியது. இந்த ராக்கெட்டில் 110 டன் கோர் திரவ எரிபொருள் நிலை உண்டு. கோர் நிலையில் 2 விகாஸ் எஞ்சின்கள் உள்ளன. பூமியிலே சேமித்து வைக்கக்கூடிய UDMH, N2NO4 ஆகிய வேதி எரிபொருட்கள் இதில் பயன் படுகின்றன.
4 திரவ எரிபொருள் ஸ்ட்ராபான்கள் கொண்ட இப்போதைய திட கோர் நிலையிலிருந்து இது மாறுபட்டுக் காணப்படும். அதாவது கோர் திரவ நிலை இரண்டு திட வேதி எரிபொருள் ஸ்ட்ராபான்களால் ஆதரவளிக்கப்படுகிறது. ஒவ்வொன்றிலும் 200 டன் எரிபொருள். இதன் லிஃப்ட் ஆஃப் எடை 629 டன்னாகவும், உயரம் 42 மீட்டருக்கு அதிகமாகவும் இருக்கும்.
இந்த புதிய ராக்கெட்டை உருவாக்க 6 ஆண்டுகள் பிடிக்கும். இப்போது கிரையோஜெனிக் எஞ்சின்கள் மேல் நிலையிலேயே பயன்பட்டு வருகின்றன. இருந்தாலும் அவற்றை கீழ் நிலைகளிலும், திட, திரவ ஸ்டேஜ்களின் மூலம் ஆற்றல் அதிகரிக்கச் செய்து பயன்படுத்தவும் ஏற்பாடுகள் உள்ளன. உதாரணமாக... ஏரியன், ஸ்பேஸ் ஷட்டில் ஆகியவற்றில் இவை கீழ் நிலைகளில் பயன்படுகின்றன.
எதிர்கால ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களில் 100 டன், 200 டன் அளவுள்ள அதிக சக்தி எஞ்சின்களை கிரையோஜெனிக் ஆற்றலோடு பயன்படுத்த இருக்கிறார்கள்!

கருத்துரையிடுக