சுற்றுலா சினிமா விமர்சனம்

நடிகர் : மிதுன் என்
நடிகை : ஸ்ரீஜி
இயக்குனர் : ராஜேஷ் ஆல்பிரட்
இசை : பரணி
ஓளிப்பதிவு : ரவிசாமி


நாயகன் மிதுன், பிரஜன், ஸ்ரீஜி, அங்கிதா அனைவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், வேறு வேறு வேலைகள் செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நாயகன் மிதுனும், நாயகி சான்ட்ராவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். 

தனது காதலி சான்ட்ராவை ஊட்டிக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பதிவுத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் நாயகன் மிதுன். இதற்கு சாட்சி கையெழுத்து போடுவதற்காக, நண்பர்களிடம் எதுவும் தெரிவிக்காமல் அவர்களை சுற்றுலா செல்வதாக கூறி ஊட்டிக்கு அழைத்து சென்று ஓட்டலில் தங்கவைக்கிறார் மிதுன். 

பின்னர், சான்ட்ராவையும் தனியாக வரவழைத்து அவளை வேறு ஒரு ஓட்டலில் தங்க வைக்கிறார். அந்த ஓட்டலுக்கு சொந்தக்காரர் ரிச்சர்ட். இவர் தனது ஓட்டலில் தனிமையாக வந்து தங்கும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அதேபோல், சான்ட்ரா தனிமையில் தங்கியிருக்கும் விஷயமும் ஓட்டல் மேனேஜர் சிங்கமுத்து மூலமாக ரிச்சர்ட்டு தெரியவருகிறது. ஓட்டலில் வந்து அவள் தங்கியிருக்கும் அறைக்கு செல்கிறார் ரிச்சர்ட். அங்கு சான்ட்ரா தனிமையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாள். 

அவளை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கும் ரிச்சர்ட், அவளை எதுவும் செய்யாமல் அங்கிருந்து திரும்புகிறார். அவளை அனுபவிப்பதைவிட, அவளை தன்னுடனேயை வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆதலால் அவளுக்கு பிடித்தபடி நடந்துகொள்ள நினைக்கிறான். 

ஒருநாள் வெளியில் சென்றுவிட்டு நடுஇரவில் ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சான்ட்ராவை 2 மர்ம நபர்கள் துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு அருகிலிருக்கும் வீட்டுக்குள் நுழைகிறாள். அது ரிச்சர்ட்டின் வீடு. அங்கு வரும் சான்ட்ராவிடம் அன்பாக நடந்து கொள்கிறான் ரிச்சர்ட். 

இதற்கிடையில், சான்ட்ராவை தேடி செல்லும் மிதுன், அவளை காணாமல் பரிதவிக்கிறான். இதையடுத்து, நண்பர்களிடம் உண்மையை சொல்லும் மிதுன், அவர்களுடன் இணைந்து சான்ட்ராவை தேடுகிறான். 

மறுநாள் காலையில் ரிச்சர்ட்டே, சான்ட்ராவை ஓட்டல் அறையில் கொண்டுவந்து விடுகிறார். சான்ட்ராவின் ஓட்டல் அறைக்கு வரும் நண்பர்கள் அங்கு அவளை கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். இதையடுத்து உடனடியாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நண்பர்கள் ஏற்பாடுகள் செய்கின்றனர். ரிச்சட்டிற்கும் இதுபற்றி எந்த தகவலும் சொல்லாமல் அழைப்பு விடுக்கிறார்கள். 

இவர்களது அழைப்பை ஏற்றுவரும் ரிச்சர்ட், அங்கு சான்ட்ராவுக்கும், மிதுனுக்கும் திருமணம் நடப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். சான்ட்ராவை தன்னுடனயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ரிச்சட்டிற்கு, வேறு ஒருவனுடன் திருமணம் ஆனதை எண்ணி மனவேதனையடைகிறார். சான்ட்ராவுக்கு திருமணம் செய்துவைத்த நண்பர்களையும், நாயகன் மிதுனையும் கொடூரமாக கொலை செய்ய முடிவெடுக்கிறார். 

இறுதியில், பிரசன்னா, நண்பர்களை கொலை செய்தாரா? சான்ட்ராவிடம் ரிச்சர்ட் இவ்வளவு பாசம் காட்ட என்ன காரணம்? என்பதை பல்வேறு திருப்பங்களுடன், சஸ்பென்ஸ் கலந்த படமாக சொல்லியிருக்கிறார்கள். 

படத்தின் பிரதான கதாபாத்திரமாக ரிச்சட்டை மையப்படுத்தி படத்திற்கு விளம்பரம் செய்தாலும், இந்த படத்தில் ஒரு வில்லன் கலந்த ஹீரோ கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் நடித்திருக்கிறார். கதையில் அழுத்தம் இல்லாததால் இவரது கதாபாத்திரத்தை ரசிக்க முடியவில்லை. ஆனால்,சைக்கோ கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் என்றால் அது உண்மையே. 

படத்தின் நாயகன் மிதுனுக்கு பெரியதாக ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரம். ரொம்பவும் இயல்பாக நடித்திருக்கிறார். நாயகி சான்ட்ரா அழகு பதுமையாக வருகிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. மற்றபடி நண்பர்களாக வரும் அனைவருக்கும் படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்புகளை குறைவே. இருந்தாலும், அவரவர் தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள். 

இயக்குனர் ராஜேஷ் ஆல்பிரட் சென்டிமெண்ட் கலந்த திரில்லர் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாததால் திரில்லர் கலந்த படமாக இதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. முதல்பாதியிலேயே படத்தின் முடிவு தெரிந்துவிடுகிறது. இரண்டாம் பாதி முழுக்க கிளைமாக்ஸ் காட்சியை முழுக்க முழுக்க பரபரப்புடன் எடுத்திருப்பதாக இயக்குனர் கூறியது, படத்தில் தெரியவில்லை.

ரவி ஸ்வாமியின் ஒளிப்பதிவு அற்புதம். பரணியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 

மொத்தத்தில் ‘சுற்றுலா’ குதூகலமில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget