இந்தியப் படங்களின் வசூலை முறியடித்த லிங்கா

கன்னட தயாரிப்பாளராக ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க, கர்நாடகாவைச் சேர்ந்த ரஜினிகாந்த், அனுஷ்கா, பீகாரைச் சேர்ந்த சோனாக்ஷி சின்ஹா,
ஆந்திராவைச் சேர்ந்த ஜெகபதி பாபு, கே.விஸ்வநாத், தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தானம், ஆகியோர் நடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஒரு இந்தியப் படமாக உருவாகி உலகம் முழுவதும் பரபரப்பாக வெளியான படம் 'லிங்கா'. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 60 கோடி ரூபாய் என கன்னட சேலனல்கள் கலக்கலான செய்தியை வெளியிட்டு வருகிறார்களாம். இதுவரை வந்த இந்தியப் படங்களின் வசூலைக் கூட 'லிங்கா' முறியடித்து விட்டது என்று சொல்கிறார்களாம்.

இப்போதெல்லாம் பரபரப்புக்காக யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் என்ற நிலைதான் உள்ளது. தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரையில் உண்மையான வசூல் நிலவரத்தை யாருமே வெளியிடுவதில்லை. 'லிங்கா' படத்தின் வசூல் நிலவரத்தைப் பற்றி அங்கும் இங்கும் விசாரித்ததில் சுமார் 25 கோடியை முதல் நாள் வசூலாகப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 16 கோடியும், மற்ற இடங்களில் 9 கோடி வரையிலும் வசூலித்திருக்கலாம் என்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பு நிறுவனமே முதல் நாள் வசூல் இவ்வளவு என வெளியிட்டால்தான் படத்தின் வசூல் பற்றி பரபரப்புச் செய்திகள் வெளியாவது குறையும், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக செய்வார்களா....?
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget