பைலட் பார்க்கக்கூடிய காட்சியை விமான பயணிகளும் காண அற்புத விமானம்

விமானம் பறக்கும்போது பைலட் பார்க்கக்கூடிய காட்சியை பார்க்க விரும்பும் விமான பயணிகளுக்காக உருவாக்கப்பட்ட புதிய விமானம்
இது. இந்த ட்ரைட்டன் விமானத்தில் பைலட்டிற்கு இரண்டு புறத்திலும் உள்ள விங்-ன் அடிப்பகுதியில் இரண்டு அறைகள் உள்ளது. இதில் 3 முதல் 5 பயணிகள் அமர்ந்து பைலட் பார்க்கக்கூடிய காட்சியை பயணிகளும் காணக்கூடிய வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மக்கள் உலகின் மிக அழகான மற்றும் மலை பகுதிகளுக்குச் செல்ல இந்த விமானம் ஏற்றதாக இருக்கும். 

இந்த ட்ரைடன் விமானத்தில் பயணிகள் இதுவரை கண்டிராத அதிசயங்களை சுற்றிவேடிக்கை பார்க்கும் வகையில் சுற்றுவட்டக் காட்சியும் மற்றும் ஆடம்பர வசதிகளுடன்கூடிய சொகுசு பயணம் மேற்கொள்ளவும் உதவுகிறது. இதன் விண்டோ அளவு கம்ர்ஷியல் ஏர்லைனில் பயணம் செய்வது போல் இல்லாமல், ஒரு சீரியல் பெட்டி போல் உள்ளது. பயணிகள் தங்களுக்கு பிடித்தமான மலை எல்லைகள், ஏரிகள் மற்றும் கடற்கரைகள் போன்றவற்றை வித்தியாசமான கோணங்களிலும் மற்றும் காட்சிகளையும் பறந்து கொண்டிருக்கும்போதே புகைப்படம் பிடித்துக்கொள்ளலாம். இது காண்பதற்கு ராணுவ ஜெட் போல் தோன்றும், ஆனால் இது தனியார் விமானம் ஆகும் என்று லிஃப்ட் நிகழ்ச்சி மேலாண்மை தலைவரான மார்கோ Parrotto, கூறியுள்ளார். 
42 அடி கொண்ட விங்ஸ்பாமில் இரைச்சல் குறைப்பதற்காகவும் மற்றும் கூடுதல் வசதிக்காகவும் குறைந்த ஆர்பிஎம் ல் இயங்கக்கூடிய ஒரு பெரிய ப்ராப் ஸ்விங்கிங் 450 ஹார்ஸ்பவர் டர்போப்ராப் கொண்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் எலக்ட்ரானிக் ஹைப்ரிட் பவர் கொண்ட பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைதியாக செல்லக்கூடிய இடங்களில் 20 நிமிடங்கள் வரை இரைச்சல் இல்லாமல் பயணிக்கும்¢. இது கிராண்ட் கனியன், கெய் வெஸ்ட், ஹவாய், லேக் டாகு மற்றும் பிற இடங்கள் போன்ற இடங்களின் மேல் பறக்க வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பாதுகாப்பான மற்றும் அமைதியான விமானம் ஆகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget