100 நாட்கள், 150 நாட்கள், 200 நாட்கள் ஓடுவதுதான் சாதனையாகப் பார்க்கப்பட்ட காலம்போய், இப்போது ஒரு படத்தின் டீஸர், டிரைலர் ஆகியவை
'யூ டியூப்'பில் செய்யும் சாதனைகள்தான் பெரிய விஷயமாக உள்ளன. டிசம்பர் 4ஆம் தேதி வெளியான அஜித்தின் 'என்னை அறிந்தால்' டீஸர் 24 மணி நேரத்தில் 14 லட்சம் பார்வையாளர்களையும், 42 ஆயிரம் 'லைக்'குகளையும் பெற்றதை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சாதனையாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் சிவகார்த்திகேயனின் 'காக்கி சட்டை' படமும் சாதனை படைத்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படத்திற்கு கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான 6 நாட்களுக்குள் இந்த மோஷன் போஸ்டருக்கு தற்போது ஐந்து லட்சத்திற்கும் ஹிட்ஸ் கிடைத்திருக்கிறது. திரையுலகில் நுழைந்து 3 வருடங்களில், 7 படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இளம் நாயகனுக்கு இவ்வளவுபெரிய வரவேற்பு கிடைத்திருப்பது நிச்சயம் ஒரு சாதனைதான். சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்த 'மான் கராத்தே' படத்தின் டீஸரை 10 லட்சம் பேரும், டிரைலரை 16 லட்சம் பேரும் இதுவரை பார்த்துள்ளனர்.
'காக்கி சட்டை' படத்தின் டீஸர், டிரைலர் அவரது முந்தைய படங்களின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

கருத்துரையிடுக