மழைக்காலத்தில் எந்த உடை அணியலாம்

முகத்தை பேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து,
முகத்தில், 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில், அதிகமாக வியர்ப்பதை குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்அப் கலையாமல், பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும். 

மழைக்காலத்தில், உதட்டை அலங்கரிக்க, மேட்டி லிப்ஸ்டிக் தான் சிறந்தது. லைட் ஷேட், லிப் லைனர்கள் மற்றும் லிப்ஸ்டிக்கள் பயன்படுத்தலாம். இந்த காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிர்க்க உதவும். 

மழைக்காலத்தில், கிரிஸ்ப், காட்டன் மற்றும் பட்டு உடைகள் அணிவதை முடிந்த வரைத் தவிர்க்கவேண்டும். சிந்தடிக் உடைகளே ஏற்றது. இவை, விரைவாக உலர்வதோடு, காய்ந்த பின்னும், அதன் ஒரிஜினல் நிறம் அப்படியே நீடிக்கிறது.

மழைக்காலத்தில், சாலைகளில் சேறு இருக்கும் என்பதால், வெள்ளை மற்றும் லைட் கலர் உடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். நீலம், ரிச் கிரீன், அடர் ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் உடையணியலாம். மேக்அப்பிற்கு ஏற்றவாறு உடை அணியலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget