குழந்தையின்மையா இனி கவலை இல்லை

கர்ப்பப்பையில் கரு உருவாகும் காலத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும், தாய் மருத்துவ பரிசோதனை செய்து கருவின் வளர்ச்சியைக் காண்பது மிகவும் அவசியமானது. குழந்தை உருவான மூன்று மாதத்தில் மூளை, இதயம், முதுகுத் தண்டுவடம், கண், கை, கால் ஆகிய உறுப்புகள் உருவாகத் தொடங்குகின்றன. 

இந்த நிலையில் USG ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டால் குழந்தையின் சீரான வளர்ச்சியைக் கணித்து விடலாம். நல்ல ஆரோக்கியமான கரு உருவாவதற்கு ஃபோலிக் ஆசிட் மற்றும் மல்ட்டி வைட்டமின் உடம்பில் அவசியம். 

இதனைக் கருத்தில் கொண்டு, திருமணம் ஆனவுடன் கருத்தரிக்க அதிக வாய்ப்பு இருப்பதால், திருமணத்திற்கு இரண்டு மாதம் முன்னரே மகப்பேறு மருத்துவர் ஆலோசனைப்படி சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. 

மாறிவரும் வாழ்வியல் சூழ்நிலைகளாலும், அடிப்படையான மருத்துவ காரண, காரணிகளாலும் குழந்தையின்மை அல்லது கருவுறாமை எனும் நிலை திருமணமான தம்பதியினரிடையே அதிகம் நிலவுகிறது. 

இந்த குறையை போக்க தற்போது மருத்துவ துறையில் புதிய முறை வந்துள்ளது. இந்த முறையில்  கர்பப்பையில் வீரியமுள்ள விந்தணுக்களை நுண்ணிய தொழில்நுட்ப முறையில் தேர்ந்தெடுத்து, ஊசி மூலம் செலுத்தி கருக்கட்டச் செய்வது இன்றைய விஞ்ஞான மருத்துவ சாத்தியம். 

கருவுறாமல் வருந்தும் இளம் தம்பதியினருக்கு Intra Uterine Insemination (IUI) எனப்படும் இந்த எளிய மருத்துவ முறை மூலம் கருக்கட்ட இயலும் என்கிறார் இவர். ஃபெலோப்பியன் குழாய்களில் (Fallopian Tubes) அடைப்பு, குறைவான விந்தணு அளவுகள், (Endometriosis), விந்து உயிரணு செயலிழப்பு மற்றும் கண்டறியப்படாத பல்வேறு குறைபாடு உடைய தம்பதிகளுக்கு ‘இக்ஸி’ (ICSI) எனும் செயல்முறை அதிகபட்ச பயனளிக்கக் கூடியது. 

இம்முறைப்படி சைட்டோபிளாசத்தினுள் சரியான விந்தணுவை மிக நுண்ணிய மைக்ரோஸ்கோப்புகள் (Microscopes) மூலம் உட்செலுத்தி கருக்கட்டல் செய்ய முடியும். தாயின் சூலகத்தில் (Ovary) இருந்து கருமுட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு விந்தணுக்களோடு ஆய்வகத்தில் கருவுறச் செய்யப்படுகின்றன. பின்னர் இக்கரு பெண்ணின் கர்பப்பையினுள் செலுத்தப்படுகிறது. 

பிளாஸ்டோஸிட் வளர்ப்பு (Blastocyst Culture) எனும் முறையின் கீழ் உகந்த ஆய்வக சூழலில் ஐந்தாம் நாள் வரை கரு வளர்க்கப்படுகிறது. பின் அக்கருவை பெண்ணின் கருப்பையில் பொதிந்து வைத்தல் ஆகும். இளம் வயது தம்பதியினருக்கும், அதிக கருமுட்டை எண்ணிக்கை கொண்டவர்களுக்கு இச்சிகிச்சை வெற்றிகரமான பயனை அளிக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget