மதுவுக்கு அடிமையாகும் பெண்கள்

ஆணுக்கு இருக்கும் குடிநோய்க்கும் பெண்ணுக்கு இருக்கும் குடிநோய்க்கும் வித்தியாசம் இருக்கிறது. பெண்கள் வெறும் வயிற்றில் குடிப்பார்கள்.
நன்றாகப் பசித்தாலும் கொறிப்பார்களே தவிர, சாப்பிட மாட்டார்கள். உடல் பெருத்துவிடும் என்கிற பயமும் சேர்ந்துகொள்கிறது. 

இது பெண்களுக்கே உரித்தான குடிநோய். ஒருகட்டத்தில் இது மரணம் வரையும்கூட இழுத்துச் செல்லும். அழகையும் மெல்லிய உடற்கட்டையும் விரும்பும் பெண்களே அறியாமையால் இந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். உடல் அழகு கூடும், தோல் மெருகேறும், சிவந்த நிறத்தைப் பெறலாம் என்பது போன்ற கவர்ச்சி வார்த்தைகளில் மயங்கிய பெண்கள், மதுவைப் பழகியிருக்கிறார்கள். 

மது அருந்துவதால் ஒருபோதும் அழகு கூடாது. மாறாக, தோல் சுருக்க பாதிப்புகள் விரைவிலேயே ஏற்படும். அதுவும் ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம். ஏனெனில், ஆண்களின் உடலைவிடப் பெண்களின் உடலில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகம். மதுவின் பாதிப்பால் கல்லீரல் சுருங்கி கொழுப்பு அங்கு கூடுதலாகும்போது என்சைம்களில் பாதிப்பு ஏற்படும். 

இது தோல் சுருக்கத்தை விரைவுபடுத்துகிறது. அடுத்தது, மது அருந்தும் பெண்கள் ஆண்களைவிட விரைவில் மயக்கம் அடைவார்கள். மது அருந்தும்போது ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹாலின் அளவுக்கு மருத்துவக் கணக்கீடுகள் உண்டு. இதனை, ‘ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு (Blood alcohol content level) என்கிறோம். 

ஆண் ஒருவர் சுமார் 240 மில்லி அளவுக்கு மது அருந்தும்போது இந்த அளவு சராசரியாக 0.20-லிருந்து 0.29 வரை இருக்கும். இது ‘சுயநினைவு இல்லாமல்போக வாய்ப்புள்ள’ நிலை. ஆனால், இதுவே பெண் ஒருவர் அதே அளவு மது அருந்தும்போது, அந்த அளவு 0.30-லிருந்து 0.39 வரை உயர்கிறது. இது ‘சுயநினைவு இல்லாத நிலை’. மருத்துவம் இதனை மரணத்துக்கு வாய்ப்புள்ள நிலை என்றும் குறிப்பிடுகிறது. இ

தற்குக் காரணம், ஆண்களின் உடலைவிட பெண்களின் உடலில் நீர்ச்சத்து குறைவு. பாலியல் உறவைப் பொறுத்தவரை ஆணைவிடப் பெண்ணின் உடல் உள் உறுப்புகளுக்கே பணிகள் அதிகம். ஆல்கஹாலின் தன்மையால் உள் உறுப்புகள் சோர்வடைந்திருக்கும் நிலையில், பிறப்புறுப்பில் இயற்கையாகச் சுரக்க வேண்டிய திரவம் சுரக்காது. 

இது வலியை ஏற்படுத்தி, பாலியல் உறவைச் சிக்கலாக்குகிறது. மனரீதி யான அழுத்தங்களுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் வழி வகுக்கிறது. சமயத்தில் கர்ப்பமும் உண்டாகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு தான் மது பழக்கம் அதிக பாதிப்பைத் தருகிறது. ஆண்களைவிட பெண்கள் உடலில் நீரின் அளவு குறைவாக உள்ளது. 

அதனால் உள்ளுறுப்புகளை மது வெகு வேகமாக தாக்கும். மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகள் உடனடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது. நேரடியாக இதயத்தை தாக்கி ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருக்கிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கும் சக்தி கொண்டது மது. குறைப்பிரசவம் ஆகவும், கருக்கலைப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது. 

அதோடு குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கும். அப்படியே குழந்தை பிறந்தாலும் நினைவாற்றல் மழுங்கி பார்வை குறைவுடன் தான் இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்கள் குடிப்பதால் பால் குறைந்து போகும். அதையும் மீறி சுரக்கும் பாலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து மதுவின் தீமைகள் குழந்தைகளுக்கு போய் சேரும். 

கர்ப்பத்துடன் முடிந்துவிடவில்லை பிரச்சினைகள். குழந்தை புஷ்டியாக இருப்பதற்காக, கர்ப்ப காலத்தில் ஒயின் குடிக்கலாம் என்கிற தவறான கருத்துக்கள் இங்கே அதிகம். ஒயினில் இருந்தாலும் ஓட்காவில் இருந்தாலும் ஆல்கஹால் என்பது ஒன்றே. கர்ப்ப காலத்தில் மது அருந்துவது என்பது ஒரு சந்ததியையே அழிக்கும் பாவத்துக்கு ஈடானது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget