வீட்டில் பேஷியல் செய்வது எப்படி

சருமத்தைப் பாதுகாக்க தினசரி செய்ய வேண்டியவற்றையும், வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய ஃபேஷியல் பற்றியும் பார்க்கலாம்.
காலைல குளிக்கிறதுக்கு முன்னாடியும், ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னாடியும் சருமத்தை சுத்தப்படுத்தணும். 

தரமான கிளென்சர் வாங்கி, முகத்துல தடவி, பஞ்சால துடைச்சு எடுக்கணும். அடுத்து டோனர். இதை சருமத்துக்கான டானிக்னு சொல்லலாம். கைகள்ல கொஞ்சமா டோனர் எடுத்து, முகத்துல அப்படியே தடவணும். வெள்ளரிக்காய் கலந்த டோனர் ரொம்பவே நல்லது. 

மூணாவதா ஸ்க்ரப். பாதாம் கலந்த ஸ்க்ரப் வாங்கி, முகத்துல தடவி, வட்ட வடிவத்துல தேய்ச்சு விட்டு, வெந்நீர்ல நனைச்சுப் பிழிஞ்ச டவலால துடைத்து எடுக்கவும். இது சருமத்துல உள்ள பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸை தளர்த்தி விடும். அப்படியே துடைத்து எடுத்தால் முகம் சுத்தமாகி விடும். 

அடுத்ததா மசாஜ். கற்றாழை ஜெல் எல்லாவிதமான சருமத்துக்கும் பொருந்தும். அதுல கொஞ்சமா எடுத்து, முகத்துல தடவி, மேல் நோக்கி மென்மையா மசாஜ் பண்ணலாம். 

மசாஜ் முடிஞ்சதும், முகத்தை சுத்தமா துடைச்செடுத்துட்டு, பேக் போடலாம். பால் கலந்த மில்க் பேக் எல்லா சருமத்துக்கும் ஏற்றது. பேக் கிடைக்காதவங்க, சுத்தமான சந்தன பவுடரை உபயோகிக்கலாம். வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே, முகம் பொலிவா இருக்கும். சரும நிறமும் கூடும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget