இன்னுமா நம்மள நம்பறாங்க சினிமா விமர்சனம்

நாயகன் சுதாகர், இன்ஜினியரிங் படித்துக்கொண்டே ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். அந்த லட்சியம் என்னவென்றால், திருமணத்திற்கு
முன்பே ஒரு பெண்ணுடன் நெருங்கி பழக வேண்டும். அந்த பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் அவருடைய மாபெரும் லட்சியம். சுதாகரின் லட்சியத்திற்கு இவரது நண்பர்களும் ஆதரவாக இருக்கிறார்கள். 

இந்நிலையில், இவனது வீட்டுக்கு அருகில் குடிவருகிறது நாயகி திரிவேனியின் குடும்பம். இருவரது பெற்றோரும் நட்புடன் பழகி வருகிறார்கள். அதனால், இவர்களும் நண்பர்களாகிறார்கள். ஒருகட்டத்தில் தன்னுடைய லட்சியத்தை திரிவேனியிடம் கூறுகிறான் சுதாகர். இதைக் கேட்டதும் ஆச்சர்யப்படும் திரிவேனி, தனக்கும் அதுபோல் லட்சியம் இருப்பதாக அவனிடம் கூறுகிறாள். 

அன்றுமுதல், இருவரும் நெருக்கமாக ஊர் சுற்றி வருகிறார்கள். ஒருநாள் இருவரும் வீட்டில் பொய் சொல்லிவிட்டு டேட்டிங் செல்கிறார்கள். ஆனால், அங்கு திரிவேனிக்கு வயிற்று வலி வந்துவிடுதால் இவர்களுக்குள் எதுவும் நடப்பதில்லை. இருந்தும் மறுநாள் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் சுதாகர், திரிவேனியை தனது இல்லத்திற்கு அழைக்கிறான். அவளும் சுதாகரின் வீட்டிற்கு வருகிறாள். 

அவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான் சுதாகர். முதலில் அதை ஏற்றுக் கொள்ளும் திரிவேனி, ஒருகட்டத்தில் அது தவறு என்பதை உணர்கிறாள். அவனை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறாள். தன்னுடைய லட்சியம் தவறு என்பதை புரிந்துகொண்ட திரிவேனி, சுதாகரிடம் பேசுவதை தவிர்க்கிறாள். 

இதற்கிடையில் திரிவேனிக்கு அவளது பெற்றோர் வேறு ஒரு பையனை திருமணம் முடித்து வைக்க முடிவு செய்கின்றனர். இது சுதாகருக்கு தெரிய வரவே, அவளை பிரிய முடியாமல் தவிக்கிறான். அதேபோல், திரிவேனியும் சுதாகரின் பிரிவால் மிகவும் மனம் வாடிப் போகிறாள்.

திரிவேனிக்கு வேறு ஒரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதை பொறுக்க முடியாத சுதாகர் மாடியிலிருந்து கீழே குதித்து விடுகிறான். அவனை ஆஸ்பத்திரியில் வந்து சந்திக்கும் திரிவேனி அவனை காதலிப்பதாக கூறுகிறாள். இது ஒருநாள் இருவரது பெற்றோருக்கும் தெரிய வருகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், சுதாகரும், திரிவேனியும் தங்கள் காதலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் முழு மூச்சாக இருக்கிறார்கள்.

இறுதியில் இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? அல்லது பெற்றோர்களின் பேச்சை கேட்டு நடந்தார்களா? என்பதே மீதிக்கதை. 

நாயகன் சுதாகர், நாயகனுக்குண்டான தோற்றத்தில் இல்லாவிட்டாலும் நடிப்பில் ஓரளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். நண்பர்களுடன் கலாட்டா செய்யும் காட்சிகளில் கலகலப்பில்லாமல் நடித்திருக்கிறார். ஆனால், நாயகியுடனான ரொமான்ஸ் காட்சியில் சற்று நடித்திருக்கிறார்.

நாயகி திரிவேனி அழகாக இருக்கிறார். நாயகனுடைய லட்சியம்தான், தன்னுடைய லட்சியமும் என்று சொல்லி வெட்கப்படும் காட்சியில் நம்மை கவர்கிறார். பெரும்பாலான காட்சிகளில் இவருடைய சிறு சிறு முகபாவனைகள் நம்மை ரொம்பவும் ஈர்க்கிறது. 

நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் அனைவரும், ஓரளவுக்கு காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். நாயகனின் பெற்றோர்களாக வருபவர்கள் அனுபவ நடிகர்களாக இல்லாவிட்டாலும், அனுபவசாலிகள் போல் நடித்திருக்கிறார்கள். நாயகியின் அப்பாவாக நடித்திருப்பவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலக்க வைக்கிறது. 

அழகான கதையை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பாலாஜி. ஆனால், கதாபாத்திரங்கள் தேர்வுதான் சற்று மோசமோ என்று தோன்ற வைக்கிறது. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே கலகலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார். இதற்கு படத்தின் வசனம்தான் மிகப்பெரிய பலம். சித்துவின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அருண் பிரசாத்தின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள்தான். இதில் ஒயின்ஷாப்பில் ஆடிப்பாடும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

மொத்தத்தில் ‘இன்னுமா நம்மள நம்புறாங்க’ நம்பலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget