இந்தியாவின் நம்பர் 1 இயக்குனர் யார் என்பதற்கானப் போட்டி தற்போது கடுமையாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகிலிருந்து ஷங்கரும்,
தெலுங்குத் திரையுலகிலிருந்து 'நான் ஈ' படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியும் அந்த இடத்திற்காக கடுமையாகப் போட்டிப் போட்டு வருகிறார்கள். ஷங்கர் இயக்கியுள்ள 'ஐ' படம் அடுத்த மாதமும், ராஜமௌலி இயக்கியுள்ள 'பாகுபலி' படம் கோடை விடுமுறையிலும் வெளியாக உள்ளது. இந்த இரண்டுப் படங்களின் வெற்றியும், விமர்சனமும்தான் இவர்கள் இருவரில் இந்தியாவின் நம்பர் 1 இயக்குனர் யார் என்பதைத் தீர்மானிக்கும். ஆனால், ரஜினிகாந்த் இவர்களிருவரில் யார் நம்பர் 1 என்பதை நேற்றே முடிவு செய்து அறிவித்து விட்டார். 'லிங்கா' படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்று நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த் அது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
“லிங்கா' படத்துக்காக எல்லாருமே ரொம்ப கடுமையா உழைச்சிருக்கோம். ஒரு படத்தை ஒரு குறுகிய காலத்துக்குள்ள தயாரிக்கிறது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் இந்தப் படத்துல பெரிய டெக்னீஷயன்ஸ், பெரிய நட்சத்திரங்கள் எல்லாரும் இருந்தும் ஆறே மாசத்துல படத்தை முடிச்சிருக்கோம். ஹாலிவுட்ல ஒரு படம் தயாராகிறதுக்கு முன்னாடி ஒரு சில வருடங்கள் எடுத்துப்பாங்க. ஆனால், இங்க நாம அப்படியெல்லாம் பண்ணுறதில்லை. 'பாகுபலி' மாதிரி படங்கள் அதுக்கு விதி விலக்கு. அந்தப் படத்தோடவெல்லாம் 'லிங்கா' படத்தைக் கம்பேர் பண்ணக் கூடாது. 'பாகுபலி' படம் மூலம் ராஜமௌலி இந்தியாவிலேயே நம்பர் 1 இயக்குனரா கண்டிப்பா வருவாரு. 'பாகுபலி' படத்தைப் பத்தி நான் பல விஷயங்கள் கேள்விப்பட்டேன், அதனாலதான் சொல்றேன். எனக்கும் ராஜமெலி இயக்கத்துல நடிக்க ஆசை இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பா நடிப்பேன்,” என ரஜினிகாந்த் பேசும் போது தெரிவித்தார்.
ஆக, அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதை விட ராஜமௌலி இயக்கத்தில் நடிப்பதையே ரஜினிகாந்த அதிகம் விரும்புகிறார் என்று தெரிகிறது. ஷங்கரின் 'ஐ' படத்தை விட ராஜமௌலியின் 'பாகுபலி' படம்தான் மிகப் பிரம்மாண்டமானது என ரஜினியே அவரது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியத் திரையுலகில் இரண்டு இயக்குனர்களிடையே நல்ல போட்டி ஏற்பட்டுள்ளது ஆரோக்கியமான ஒரு விஷயம்தான்.

கருத்துரையிடுக