நாம் எந்த காரியம் செய்தாலும் கண்டிப்பாக அதில் ஏதாவது ஒரு சில தவறுகளை செய்வோம். இந்த தவறுகள் எல்லாம் அடிக்கடி நடைபெறாமல்
எப்போதாவது நடந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் பிரச்சனை ஏற்படும் போது மன்னிப்பை எப்படி எல்லாம் அழகாக கேட்கலாம் என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். சரி இப்போது எப்படியொல்லாம் மன்னிப்பு கேட்கலாம் என்பதை பார்க்கலாம்.
• நல்ல ஆடை ஒன்றை அணிந்து கொண்டு, ஒரு அட்டையில் நீங்கள் மன்னிப்பு கேட்கும் விவரத்தை அழகாக எழுதி, அதனை தலைக்கு மேல் தூக்கி பிடித்து, ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த படத்தை மன்னிப்பு கேட்க நினைப்பவரிடம் அனுப்பி வையுங்கள். மன்னிப்பு என்று வரும் போது, இந்த வழி உங்களுக்கு முக்கியமான ஒன்றை அளிக்கும். அதாவது, செய்த தவறுக்காக நீங்கள் உண்மையிலேயே வருந்தி மன்னிப்பு கேட்கிறீர்கள் என அவர்களுக்கு உணர்த்தும். உங்களின் வித்தியாசமான ரசனையை கண்டு ரசித்து உங்களை மன்னித்து விடுவார். பெண்களுக்கு இந்த வழி மிகவும் பிடிக்கும்.
• பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதற்கு மட்டுமே இந்த வழி சரியானதாக இருக்கும். அவர்களுக்கு நல்லதொரு பரிசு பொருள் மற்றும் க்ரீடிங் கார்டு வாங்கிக் கொடுத்து, அதனுடன் ஒரு மன்னிப்பு குறிப்பையும் கொடுங்கள். கண்டிப்பாக இது உங்களுக்கு பலனை அளிக்கும்.
• பெண்களுக்கு பூக்கள் என்றால் பிரியம். அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு பூக்களும் உதவிடும். ஆனாலும் நிலைமையின் தாக்கத்தை பொறுத்தே இந்த வழியை பயன்படுத்த முடியும். ஒரு வேளை, இது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை என்றால் இந்த வழி சரியானதே. அழகிய வண்ணங்கள் நிறைந்த, அதே சமயம் நல்ல நறுமணத்தை அளித்திடும் பூக்களை தேர்ந்தெடுங்கள். அவர்களின் வீடு அல்லது அலுவலகத்திற்கே அதனை நேரடியாக கொண்டு போய் கொடுத்தால் அது கூடுதல் பலனை அளிக்கும்.
• உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் மன்னிப்பு கேட்க போகும் நபருக்கு பிடித்த கதாபாத்திரத்தின் படத்தை கொண்ட ஆடையை அணிந்து கொள்ளுங்கள். அதை அணிந்து கொண்டு, அவர்கள் கண்ணில் படும் படி, அவர்கள் முன் செல்லவும். அப்படி செய்யும் போது, ஆடையில் உள்ள கதாபாத்திரத்தைப் போலவே அவர்களுக்கு நீங்கள் தெரிவீர்கள். அந்த கதாபாத்திரமே அவர்களிடம் மன்னிப்பு கேட்பதாக அவர்கள் உணர்வார்கள். கண்டிப்பாக உங்களை மன்னிக்கவும் செய்வார்கள்.
• உங்கள் மனைவி அல்லது கணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அவர்களை செல்லமாக ஒரு குத்து குத்தி, உங்களை மன்னிக்கும் வரை அவர்களை செல்லமாக அடிக்கலாம். ஆனால் அது விளையாட்டுத்தனமானதாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களின் எதிர்வினையையும் கவனியுங்கள். ஒரு வேளை எதிர்மறையான விளைவுகள் கண்முன்னே தெரிந்தால், வேறு ஒரு வழியை தேர்ந்தெடுங்கள்.
• பெரிய வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தி கவிதை எழுதும் கவிஞராக நீங்கள் மாற வேண்டாம். ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்கள் என்பதை மட்டும் அது தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். மன்னிப்பு என்ற வார்த்தைக்கு பல எதுகை மோனை வார்த்தைகளை நீங்கள் இணையதளத்தில் தேடி எடுத்து விடலாம். நீங்கள் எழுதும் கவிதை ஒன்றும் பெரிய புலமை வாய்ந்ததாக இருக்க கூடாது. அதை படிக்கும் போது உங்களை மன்னிக்க வேண்டியவர் வாய் விட்டு சிரித்து விட வேண்டும். அது உங்களை மன்னித்ததற்கு அடையாளமாகும்.
• மன்னிப்பு கேட்பதோடு அதை வைத்து விளையாடுவது. உங்கள் தவறின் ஆழத்தை பொறுத்து இந்த விளையாட்டின் அளவை தீர்மானித்து கொள்ளலாம். பொதுவாக நீங்கள் செய்ய விரும்பாத ஒரு விஷயத்தை, உங்களுக்கு நீங்களே வேடிக்கையான தண்டனையாக கொடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, அவர்கள் உங்களை மன்னிக்க தயார் என்றால், தண்ணீர் துப்பாக்கியை கொண்டு உங்கள் மீது தண்ணீரை அடிக்க சொல்லலாம். அல்லது அவர்களுடன் சேர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடி, அதில் அவர்கள் கையால் அடிக்கடி மரணம் கொள்வது.

கருத்துரையிடுக