இயல்பாக நடிக்கும் மீனாள்

தவமாய் தவமிருந்து படத்திற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தபோதும், அந்த படத்திற்கு பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தார் மீனாள்.
அதன்பிறகு ஜில்லுனு ஒரு காதல், பள்ளிக்கூடம், தீபாவளி, வேலாயுதம், அன்னக்கொடி, அம்மாவின் கைப்பேசி என பல படங்களில் மனதை தொடும் கதாபாத்திரங்களில் நடித்தார் அவர்.

இதில் அம்மாவின் கைப்பேசி, அன்னக்கொடி படங்கள்தான் கடைசியாக அவரை பேச வைத்தன. அதையடுத்தும் தற்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், கமர்சியல் கேரக்டர்களை விட இயல்பான உணர்ச்சிப்பூர்வமான கதைகளில் நடிப்பதில்தான் அதிக ஈடுபாடு காட்டி வருகிறாராம். இதற்கு காரணம், மீனாளுக்கு இயல்பாக எப்போதும் ஒரே மாதிரியான மனநிலையுடன் இருப்பதுதான் நிஜத்திலும் ரொம்ப பிடிக்குமாம். முக்கியமாக, தான் தற்போது என்னதான் சினிமாவில் நடித்து சம்பாதித்து கார், வீடு என்று செட்டிலாகி விட்டபோதும், ஆரம்பத்தில் தான் இருந்தது போன்று எளிமையாகத்தான் நடந்து கொள்கிறாராம். முக்கியமாக, தான் சினிமாவுக்கு வந்தபோது தனக்கு சின்னச்சின்ன வேடங்கள் தந்து உதவியவர்கள் யாரையாவது கண்டுவிட்டால், அது பொது மக்கள் கூடும் ஏரியாவாக இருந்தாலும் காரை நிறுத்தி விட்டு அவர்களிடம் நலம் விசாரிக்கிறார் மீனாள். அவரது இந்த மாறாத குணத்தை சினிமா வட்டாரத்தில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget