லிங்கா கதை லீக்கான ரகசியம்

லிங்கா படத்தின் தெலுங்குப் பதிப்புக்கான புரமோஷன் நிகழ்ச்சி 08.12.2014 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.


தெலுங்குப் படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, இயக்குநர் கே.எஸ்ரவிகுமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கதாசிரியர் பொன்.குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அரசியல் பேசாமல் லிங்கா பட அனுபவங்களைப் பற்றி மட்டுமே பேசினார் ரஜினி....

சுமார் நான்கு வருடங்கள் கழிச்சி நான் நடிச்சிருக்கிற லிங்கா படம் வெளிவரப் போகுது. இடையில வந்த கோச்சடையான் படம் அனிமேட்டட் படம், நேரடியா நான் நடிச்சி வர்ற படம் லிங்காதான். ஆறு மாசத்துக்குள்ள இந்தமாதிரியான ஒரு மிகப்பெரியபடத்தைக் கொடுக்கிறது நடக்காத ஒரு விஷயம். பெரிய நட்சத்திரங்கள், மிகப்பெரிய டெக்னீஷியன்கள் பங்கு பெற்றிருக்கிற படம்ங்கற அர்த்தத்தில் இதை சொல்லவில்லை. இந்தப் படத்தோட கதை பெருசு, இந்தப் படத்தோட பின்னணி பெருசு.

என்று பேசிய ரஜினி பேச்சு சுவாரஸ்யத்தில் லிங்கா படத்தின் கதையைப் பற்றியும் பேசத்தொடங்க, கே.எஸ்.ரவிகுமார் முகத்தில் டென்ஷன்.
சுதந்திரத்துக்கு முன்னாடி நாற்பதுகள்ல நடக்கிற கதை இது. ஒரு மிகப்பெரிய அணை கட்டறத பத்தின கதை. டிரெயின் சண்டைக்காட்சிகள், யானைகள், குதிரைகள், அறுபது, எழுபது சீன் படத்துல இருந்தால், அதுல நாற்பது சீன்கள்ல, ஆயிரம் பேராவது நடிச்சிருப்பாங்க. இவ்வளவு கஷ்டத்தோட குறிப்பிட்ட காலத்துக்குள்ள இந்தப்படத்தை முடிச்சிருக்கோம்னா இயக்குநர் ரவிக்குமார், அவரோட யூனிட் மற்றும் தயரிப்பாளர் ஆகியோர்தான் காரணம். அதுக்கு நடிகர்கள் காரணம் இல்லை. ஏன்னா, நாங்க கடைசில வந்து ஷுட்டிங் முடிஞ்சதும் சீக்கிரம் போயிடுவோம். ஆனால், டெக்னீஷியன்ஸ்தான் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க.

தொடர்ந்து பேசிய ரஜினி லிங்கா படத்தின் தொழில்நுட்பக்கலைஞர்களை பெருமைப்படுத்தினார்...

இந்தப் படத்துல மூணு ஆச்சரியங்கள் இருக்கு. முதல் ஆச்சரியம்....டெக்னீஷியன்கள். ஏ.ஆர்.ரகுமான், ரத்தினவேலு, சாபுசிரில், அனுஷ்கா, சோனாக்ஷி, அவ்வளவு பேருமே ரொம்ப பிசியானவங்க. அது படம் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும்.

இரண்டாவது ஆச்சரியம்....இந்தப்படத்தோட கதை! என்னோடதுன்னு சில பேர் வழக்கு போட்டிருக்காங்க. டிவிட்டர்ல ஒண்ணு படிச்சேன். ரஜினி படத்துல கதை இருக்கா? அப்படி அவரோட படத்துல கதை இருந்தால் அதை நாலு பேரு அவங்க கதைன்னு சொன்னாங்கன்னா, நான்போய் அந்தப்படத்தை முதல்ல பார்க்கிறன்னு ஒருத்தர் எழுதியிருந்தாரு. உண்மையிலேயே இந்தப் படத்துல மிகச் சிறப்பான கதை இருக்கு. அந்த நாலு பேரோட கதை இல்லை இது. இந்தப் படத்தோட கதை பொன்குமரனுடையது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை. இதை மாதிரி ஒரு கதையில நான் நடிச்சது எனக்குக் கிடைச்ச பாக்கியம்.
மூணாவது ஆச்சரியம் என்னன்னா... நான் இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். சண்டைக் காட்சிகள்ல நடிச்சதை சொல்லலை. டிரெயின் சண்டை, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதெல்லாம் கூட கிடையாது. இங்க இருக்கிற அனுஷ்கா, சோனாக்ஷி மாதிரியான பொண்ணுங்களோட டூயட் பாடினதுதான் அந்தக் கஷ்டம். சத்தியமா சொல்றேன், சோனாக்ஷி கூட டூயட் பாடினது எல்லாம் ரொம்பக் கஷ்டம். சின்னக் குழந்தையா இருக்கும்போது சோனாக்ஷியப் பார்த்தது. என்மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா கூட வளர்ந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்ன உடனே எனக்கு வேர்த்துக் கொட்டிடுச்சி. என் முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்துல நடிச்சபோது கூட அந்த அளவுக்கு டென்ஷன் இருந்ததில்லை. நடிகர்களுக்கு கடவுள் கொடுக்கிற தண்டனை என்ன தெரியுமா? அறுபது வயசுல டூயட் பாடறதுதான்.

ரஜினிகாந்தை ரொம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கன்னு சென்னையில நடந்த இசைவிழால கேமராமேன் ரத்தினவேலு கூட வெளிப்படையா சொல்லியிருந்தாரு. நான் சினிமாவுக்கு வந்து நாற்பது வருஷம் ஆகிடுச்சி. ஒருசீனியர் நடிகரா சினிமாவுக்கு என்ன தர்றீங்கன்னு கேட்டால், குறுகிய காலத்துல இந்த மாதிரி ஒருபடத்தைத் தயாரிச்சிக் கொடுத்திருக்கோம்னு சொல்வேன்.

ஹாலிவுட்ல கூட பெரிய பெரிய படங்கள் வருது. அங்கெல்லாம் ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல மாதங்கள் எடுத்துப்பாங்க. ஆனால், ஷுட்டிங் போயிட்டால் நாலஞ்சி மாசங்கள்ல அதை முடிச்சிடுவாங்க. அதை இங்கேயும் சொல்லலாம்.” என்று பேசிக்கொண்டே போன ரஜினி திடீரென சுதாரித்துக்கொண்டு, 'பாகுபலி வேற மாதிரியான படம். அது இரண்டு பாகம் எடுக்கிற படம். அதை நான் பார்த்திருக்கேன். அது வேற படம். இயக்குனர் ராஜமௌலிக்கு என்னோட பாராட்டுக்கள். அவர் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனரா வருவாரு. தெலுங்கு மக்கள் எல்லாருக்கும் அந்தப்படம் மிகப்பெரிய கௌரவம். நான் வெளிப்படையா சொல்றேன். ராஜமௌலி படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சால் நான் கண்டிப்பா நடிப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ” என் பேசி சமாளித்தார்.

“ரவிகுமார் இந்தப் படத்தை ரொம்ப அழகா எடுத்திருக்காரு. ரத்தினவேலு ரொம்ப சீக்கிரமா இந்தப்படத்தை எடுக்கக் காரணமா இருந்தாரு. அனுஷ்கா, சோனாக்ஷி, அப்புறம் ஜெகபதிபாபு. திரையுலகில இருக்கிற ஒரு ஜென்டில்மேன். அவரோட நட்பு வாழ்க்கை முழுவதும் தொடரணும்னு ஆசைப்படறேன்.

இந்தப்படம் உங்க எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும். தமிழ் மக்கள் என்படத்தைப் பார்த்து எனக்கு எப்படி ஆதரவு தர்றாங்களோ, அதேமாதிரி தெலுங்கு மக்களும் எனக்கு ஆதரவு தர்றாங்க. இந்தப் படத்துக்கும் அதேமாதிரி ஆதரவு தருவாங்கன்னு நம்புறேன். தயாரிப்பளார் அல்லு அரவிந்த், அடுத்தபடம் எப்பன்னு கேட்டாரு. கதை இன்னும் ரெடியாகலைன்னு சொன்னேன். முதல்ல சிரஞ்சீவிக்கு நல்ல கதையைக் கொடுங்க. ரொம்ப நாளா அவர் காத்திட்டிருக்காரு. என்று ரஜினி பேசினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget