இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தரைவழி மற்றும் மொபைல்
போன்களை இலவசமாக அழைத்துப் பேசலாம். இந்த வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் தன் ஸ்கைப் அப்ளிகேஷன் மூலம் தந்துள்ளது.
இந்த நாடுகளில் உள்ள தொலைபேசியை அழைக்க, ஸ்கைப் அப்ளிகேஷன் திறந்து, அதில் உள்ள டயல் பேடில், அமெரிக்க அல்லது கனடா தொலைபேசியை டயல் செய்து அழைக்க வேண்டியதுதான். இணையம் வழியாக இணைப்பு கிடைத்துப் பேசலாம். இந்த இலவச அழைப்பு வசதி வரும் மார்ச் 1, 2015 வரை மட்டுமே கிடைக்கும்.
முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்கைப் குழுவாக விடியோ அழைப்பினை ஏற்படுத்தி பயன்படுத்தும் வசதியைத் தந்தது. முதலில் மாதந்தோறும் 9.99 அமெரிக்க டாலர் கட்டணமாக இருந்தது. பின்னர், இது இலவசமாக்கப்பட்டது. சென்ற வாரத்தில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 தொகுப்பில் செயல்படும் ஸ்கைப் மொழி பெயர்ப்பாளர் என்னும் சோதனை முறையில் இயங்கும் அப்ளிகேஷனை வழங்கியது. இதில் சில மொழிகளுக்கிடையே உடனடியாக மொழிபெயர்ப்பு பணி கிடைக்கும் வசதி தரப்பட்டது.
நம்முடன் பேசுபவரின் மொழி தெரியாவிட்டால், அந்த மொழி இந்த திட்டத்தில் இருந்தால், உடனடியாக, அப்போதே, பேசுபவரின் கருத்து மொழி பெயர்க்கப்பட்டு நீங்கள் விரும்பும் மொழியில் கிடைக்கும். திரையின் கீழாக, இரு மொழிகளிலும் டெக்ஸ்ட் காட்டப் படும். தற்போது இந்த வசதி ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கிடையே மட்டும் இயங்குகிறது. அத்துடன் 40 மொழிகளில் சில குறிப்பிட்ட தகவல்களை மொழி பெயர்த்து தருவதாகவும் உள்ளது.
இந்த திட்டத்தினை மைக்ரோசாப்ட் ஆய்வகம், ஸ்கைப் மற்றும் பிங் பிரிவுகளுடன் இணைந்து மேற்கொண்டது. இதற்கான ஆய்வு பல ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டது. பேசப்படும் இயற்கை மொழியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளுதல், தானாக மொழி பெயர்த்தல் ஆகிய தொழில் நுட்ப பணிகளுடன் பயனாளரின் அனுபவங்கள் குறித்தும் பெரிய அளவில் தகவல் தொகுப்பு உருவாக்குதலும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது.

கருத்துரையிடுக