விடுதியை தேர்வு செய்யும் முன் யோசிக்க வேண்டியவை

நீங்கள் ஒரு ஹாஸ்டலில் சேர்வதற்கு முன், அங்கே உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பதைக் கவனியுங்கள்.
இருந்தால் ரொம்ப நல்லது. இல்லை என்றால் அங்குள்ள சிலருடன் பலகி பின்னர் அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய பாதுகாப்புக்கும், பொழுதுபோக்குக்கும் அது உதவியாக இருக்கும்.

ஹாஸ்டல்களில் சிலர் திருடும் நோக்கத்தோடு சிலர் தங்கியிருக்கக் கூடும். கைக்குக் கிடைப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் சுருட்டும் பேர்வழிகளிடம் ரொம்ப எச்சரிக்கை தேவை. உங்கள் உடமைகளையெல்லாம் ரொம்பப் பாதுகாப்பாய் வைத்திருங்கள். உங்க சொத்து, குடும்ப சூழ்நிலை, வங்கி கணக்கு போன்றவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ஹாஸ்டல்களில் சேரும் பெண்கள் அதிக அளவு நகைகளை அணிந்து கொள்ள வேண்டாம். ரொம்ப ரொம்ப அவசியமான நகைகளை மட்டும் கையில் வைத்திருங்கள். ரொம்ப மதிப்பு மிக்க பொருட்களை ஹாஸ்டலில் கொண்டு வராமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்லும்போதும், வெளியே செல்லும்போதும் தங்களது உடைமைகளை பத்திரமாக தங்கள் பெட்டிக்குள் வைத்து பூட்டி வைத்து செல்வது நல்லது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget