அரை சதம் அடித்த சூரி

வடிவேலுக்கு பிறகு நேட்டிவிட்டி காமெடியனாக அறிமுகமாகி வளர்ந்து வருகிறவர் சூரி. வெண்ணிலா கபடி குழுவில் 100 புரோட்டா
சாப்பிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் இப்போது 50 படங்களை தாண்டிவிட்டார். வெண்ணிலா கபடி குழு படத்துக்கு முன்பு ஏழு, எட்டு படங்களில் தலைகாட்டியிருந்தாலும் வெண்ணிலா கபடி குழுதான் அவருக்கு முறையான அறிமுகம் தந்த படம். அந்த வகையில் கிறிஸ்துமஸ் அன்று வெளிவரும் வெள்ளைக்காரதுரை அவருக்கு 50 வது படம்.

களவாணி, நான் மகான் அல்ல, குள்ள நரி கூட்டம், அழகர் சாமியின் குதிரை, வாகை சூடவா, வேலாயும், போராளி, மனம் கொத்தி பறவை, பாகன், சுந்தர பாண்டியன், ஹரிதாஸ், போன்ற படங்கள் அவருக்கு மிகவும் பெயர் வாங்கி கொடுத்தவை.

விமல், சூரி காம்பினேஷன் பல படங்களின் ஹிட்டுக்கு வழி வகுத்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, தேசிங்க ராஜா, மஞ்சப்பை, ஒரு ஊர்ல ரெண்ட ராஜா போன்ற படங்கள் இருவரின் காமினேஷனால் சக்சஸ் ஆனது. சிவகார்த்திகேயனுக்கும் பொருத்தமான காமெடியனாக இருந்தார், ஜில்லா படத்திலும் விஜய்யுடனும், அஞ்சான் படத்தில் சூர்யாவுடனும் இணைந்தார்.

எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து கடினமான உழைத்து முன்னுக்கு வந்தவர் சூரி. ஒரு படத்திற்கு சில ஆயிரம் சம்பளம் வாங்கியவர் இன்று ஒரு நாளைக்கு பல லட்சம் சம்பளம் வாங்குகிறவராக உயர்ந்தார்.

அதிகம் படித்திராத சூரி பெயரில் சிலர் பேஸ், புக் டுவிட்டர் தொடங்கி தவறான செய்திகளை பரப்ப உஷாரான சூரி. கஷ்டப்பட்டு தானும் அதைப்பற்றி தெரிந்து கொண்டு சொந்தமாக பேஸ்புக், டுவிட்டர் தொடங்கி கலக்குகிறார். அவர் கையில் 50 ஆயிரத்தை தாண்டிய விலையில் செல்போன் சிணுங்குகிறது.

வடிவேலுக்கு வீசிய அரசியல் புயல் சூரிக்கு தென்றல் ஆனது. வடிவேலு இடத்தை நிரப்ப முடியாவிட்டாலும். அவர் இல்லாத குறையை போக்கினார். அதுவே அவரது வெற்றிக்கு நல்ல பாதையானது. ஆரம்பத்தில் ஒரு லுங்கி கட்டம்போட்ட சட்டைதான் அவரது காஸ்ட்யூம், இன்று ஜீன்ஸ், டீசர்ட்டிலும் கலக்குகிறார்.

தற்போது பார்க்கணும்போல இருக்கு, கலக்குற மாப்ளே, ரஜினி முருகன், அங்காளி பங்காளி, கத்துக்குட்டி, இதுநம்ம ஆளு உள்ளட பத்துக்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.

ஒரே மாதிரியாக நடிக்கிறார். அளவுக்கு அதிகமாக படங்களை ஒத்துக் கொண்டு கால்ஷீட்டில் சொதப்புகிறார், அளவுக்கு அதிகமாக சம்பளம் கேட்கிறார் என்ற விமர்சனங்களும் அவர் மீது உண்டு. இருந்தாலும் பலரும் வீசும் ஹீரோ வலையில் விழாமல் தன் பாதையில் தெளிவாக நடந்து கொண்டிருக்கிறார் சூரி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget