மவுஸ் பயன்படுத்தி சொல் தேர்வு : நீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க
ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.
1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும்.
2. மவுஸால் இருமுறை கிளிக் செய்திடவும். சொல் தேர்ந்தெடுக்கப்படும்.
நீங்கள் இன்னும் கூடுதலாக சொற்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், மேலே சொன்ன இரண்டாவது கிளிக் அடுத்து, மவுஸை அப்படியே, அந்த சொற்களின் மீதாக இழுக்கவும். ஒவ்வொரு முறை இழுப்பதற்கும் ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படும். இப்படியே நாம் விரும்பும் சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், மவுஸ் கர்சரை விட்டுவிடலாம். தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை, வழக்கம்போல பார்மட் மாற்ற பயன்படுத்தலாம். வேறு செயல்பாடுகளுக்கும் உள்ளாக்கலாம்.
டெக்ஸ்ட் சொற்களின் தன்மையை மாற்ற : வேர்ட் டாகுமெண்ட் தயாரித்த பின்னர், நாம் அடிக்கடி சில சொற்களின் எழுத்தின் தன்மையை மாற்ற விரும்புவோம். அனைத்து எழுத்துக்களையும், பெரிய எழுத்துக்களில் (கேப்பிடல் லெட்டர்ஸ்) அமைக்க விரும்புவோம். அல்லது சிறிய எழுத்துக்களில் அமைய வேண்டும் எனக் கருதுவோம். வேர்ட் 2007ல், இதனை எப்படி எளிதாக மாற்றலாம் எனக் காணலாம்.
1. முதலில் எந்த சொற்களின் எழுத்துக்களின் தன்மையை மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இதில் ரைட் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து ஹோம் ரிப்பனில், Font பிரிவில் Change Case கிளிக் செய்திடவும். இங்கு உங்களுக்கு எழுத்தின் தன்மையை மாற்ற பல ஆப்ஷன்கள் தரப்படும். நீங்கள் விரும்பும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே, தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் உங்கள் விருப்பமான பார்மட்டில் அமைந்திருக்கும்.
வரிகளுக்கிடையே இடைவெளி : நீங்கள் எம்.எஸ்.வேர்ட் 2007க்கு அண்மையில் மாறி இருந்தால், அதன் வரிகளுக்கு இடையேயான இடைவெளியில் சற்று மாற்றம் இருப்பதனை உணர்ந்திருப்பீர்கள். மாறா நிலையில், வரிகளுக்கு இடையே, வேர்ட் 2003ல் இருந்ததைக் காட்டிலும் அதிக இடைவெளி இருப்பதனைப் பார்க்கலாம். இதனை எப்படி நம் விருப்பப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
வேர்ட் 2003ல், மாறா நிலையில் வரிகளுக்கு இடையே இடைவெளி ஒன்று என செட் செய்யப்பட்டிருக்கும். ஆனால், வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010ல், மைக்ரோசாப்ட் இதனை 1.15 ஆக மாற்றி அமைத்துள்ளது. இது பலருக்குப் பிடித்திருக்கலாம். ஏனென்றால், வரிகள் ஒன்றுக்கொன்று இடம் விட்டு அமைந்து பார்ப்பதற்கு நன்றாகக் காட்சி அளிக்கும். ஆனால், சிலர் இதனைத் தங்கள் விருப்பப்படி மாற்ற விரும்புவார்கள். நீங்கள் ஒரு டாகுமெண்ட் முழுவதும், வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளியினை மாற்ற விரும்பினால், ஹோம் டேப்பில், Styles குரூப் செல்லவும். பின்னர், Change Styles அடுத்து Change Styles ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், பாய்ண்ட்டரை Style Sets என்பதில் காட்டப்படும் பல்வேறு ஸ்டைல் நிலைகளைப் பார்க்கலாம்.இதில் காட்டப்படும் Live Preview என்பதனைக் கிளிக் செய்து, நீங்கள் அமைக்க விரும்பும் மாற்றம், எப்படி டெக்ஸ்ட்டை அமைக்கும் என்பதனைப் பார்க்கலாம். இங்கு வரி இடைவெளியை 1.0 என அமைக்கலாம். இதனை மாறா நிலையில் அமைத்திட Change Styles என்பதில் கிளிக் செய்து, அதன் பின் Set as Default என்பதில் கிளிக் செய்திடவும்.
டாகுமெண்ட்டில் குறிப்பிட்ட வரிகளை மற்றும், நீங்கள் விரும்பும் வரி இடைவெளியில் அமைக்க விரும்பினால், மாற்ற விரும்பும் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, ரிப்பனில், பாராகிராப் (Paragraph) குரூப்பில், Line and Paragraph Spacing என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில், நீங்கள் விரும்பும் வரி இடைவெளியினைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்ததற்கேற்ற வகையில் இடைவெளி அமையும்.

கருத்துரையிடுக