மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P470 3ஜி டேப்லெட்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வௌ¢ளிக்கிழமை அன்று 3ஜி -இயக்கப்பட்ட குரல் அழைப்பு கேன்வாஸ் டேப் P470 டேப்லெட்டை இந்தியாவில்
ரூ.6,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லட் டிசம்பர் 20 முதல் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P470 டேப்லெட்டில் டூயல் சிம் கொண்ட ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இதில் 1024x600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டேப்லட்டில் 1 ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz டூயல் கோர் மீடியாடெக் MT8312 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 5 மெகாபிக்சல் ஃபிக்சடு ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3 -மெகாபிக்சல் (VGA) முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. 

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P470 டேப்லெட்டில் மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இதில் 3200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த டேப்லட் சில்வர் மற்றும் மிஸ்டிக் கிரே வண்ண வகைகளில் கிடைக்கும். டேப்லட்டின் இணைப்பு அம்சங்கள், Wi-Fi 802.11 b/ g/ n, ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, மைக்ரோ-யுஎஸ்பி, FM ரேடியோ, ஜிஎஸ்எம் மற்றும் 3ஜி உள்ளிட்டவை அடங்கும். காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரோசிமிட்டி சென்சார் மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை வழங்குகிறது.

கேன்வாஸ் டேப் P470 இந்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், தமிழ், மற்றும் கன்னடம் உள்ளிட்ட 21 இந்திய மொழிகளின் ஆதரவு கொண்டுள்ளது. மேலும், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் 8 இன்ச் ஆண்ட்ராய்டு டேப்லட்டான கேன்வாஸ் டேப் P666 ரூ.10,999 விலையில் வெளிப்படுத்தியது. 

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P470 டேப்லெட் குறிப்புகள்:

  • டூயல் சிம்,
  • 1024x600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் TFT டிஸ்ப்ளே,
  • 1 ஜிபி ரேம்,
  • 1.3GHz டூயல் கோர் மீடியாடெக் MT8312 பிராசசர்,
  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • Wi-Fi 802.11 b/ g/ n,
  • ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத் 4.0,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • FM ரேடியோ,
  • ஜிஎஸ்எம்,
  • 3ஜி,
  • ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
  • 3200mAh பேட்டரி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget