கடந்த வாழ்க்கையை மறைக்கும் ஆண்கள்

உங்களின் பழைய வாழ்க்கையை உங்கள் காதலி அல்லது மனைவியிடம் மறைக்கவே செய்வீர்கள். ஆனால் அந்த பழைய வாழ்க்கை பற்றி உங்கள்
துணைவிக்கு தெரியவரும் போது அது குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே மனைவியிடம் எதையும் மறைக்க கூடாது. 

• உங்களின் பழைய உறவுகள் பற்றி ஒரு நாள் உங்கள் மனைவிக்கு தெரிய வரும் போது, இனியும் அவர் எதையும் பொறுக்க மாட்டார். உங்கள் மீது சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். தான் அவமதிக்கப்பட்டு விட்டதாக கருதுவார். உங்கள் உறவின் வருங்காலத்தின் மீது பாதுகாப்பின்மையை உணர்வார். 

• அதை அவர்களாகவே கண்டுபிடித்து விட்டால், உங்களை விட்டு நிரந்தரமாக பிரியவும் வாய்ப்புள்ளது. முதலில், நீங்கள் அவர் மீது உண்மையான காதலை கொண்டிருந்தால், ஏன் அவரிடம் இருந்து எதையும் மறைக்க வேண்டும்? 

அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உங்கள் கடந்த காலத்தை அவர் மன்னித்து உங்களை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? உங்கள் உறவின் மீது நீங்கள் உண்மையிலேயே மரியாதை வைத்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் நடந்துள்ள நல்லது, கெட்டது மற்றும் மோசமான அனைத்து கடந்த கால நிகழ்வுகளையும் அவரிடம் தைரியமாக கூறுங்கள். 

• உங்கள் கடந்த காலத்தை உங்கள் மனைவி மன்னித்தாலும் கூட, இனி எந்த பெண்ணிடமும் நெருங்கி பழக அனுமதிக்க மாட்டார். அதற்கு காரணம் உங்கள் குணத்தின் மீது அவர் சந்தேகப்பட தொடங்குவார். ஆனால் அவராக அறிவதற்கு முன்பு, நீங்களே உங்களின் கடந்த காலத்தை பற்றி அவரிடம் சொல்லி விட்டால், உங்களின் வெளிப்படையை எண்ணி அவர் அசந்து போவார். அதனால் எதையும் மறைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். 

• ஒரு பெண்ணின் முன்பு ஒரு ஆண் மரியாதையை இழந்து விட்டால், அதற்கு பிறகு அவர் ஆணாகவே இருக்க முடியாது. அப்படி ஒரு நிலைமை வருவதற்கு முன்பு, உங்களின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அவரிடம் வேகமாக கூறி விடுங்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget