சாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் ஒரு புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனான கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போனை கொரியாவில்
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாத இறுதியில் காணப்பட்டது. சாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் இப்போது அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தின் கொரியா ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் SKW 3,70,000 என்ற விலையில் (ரூ.21,200 தோராயமாக) வருகிறது. 

மேலும், புதிய கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொரியாவில் (எல்ஜி + SKT, மற்றும் Olleh) ஆகிய மூன்று முக்கிய நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுவதை பற்றி நிறுவனம் குறிப்பிடப்படவில்லை. இந்த கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் பின்புற பேனலில், ஒரு புதிய அமைப்பு கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஒன்றாகும். 
ஒற்றை சிம் (மைக்ரோ சிம்) கொண்ட கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு அடிப்படையில் (குறிப்பிடப்படாத பதிப்பு) இயங்குகிறது. இதில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.25 இன்ச் HD டிஎஃப்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1.5 ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. 
கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் CMOS சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 120 டிகிரி அளவில் காட்சிக் கோணம் லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் இணைப்பு விருப்பங்கள் 3ஜி, 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ -யுஎஸ்பி, எ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், Glonass, மற்றும் FM ரேடியோ ஆகியவை அடங்கும்.
இதில் 2500mAh பேட்டரி ஆதரவு உள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் 146.1x75x7.9mm அளவிடகிறது மற்றும் 161 கிராம் எடையுடையது. மேலும், இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கய்ரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

  • ஒற்றை சிம்,
  • 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.25 இன்ச் HD டிஎஃப்டி டிஸ்ப்ளே,
  • 1.5 ஜிபி ரேம்,
  • 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 3ஜி,
  • 4G LTE,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • மைக்ரோ -யுஎஸ்பி,
  • எ-ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத் 4.0,
  • 3.5மிமீ ஆடியோ ஜாக்,
  • ஜிபிஎஸ்,
  • Glonass,
  • FM ரேடியோ,
  • ஆண்ட்ராய்டு (குறிப்பிடப்படாத பதிப்பு),
  • 2500mAh பேட்டரி,
  • 161 கிராம் எடை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget