2014ம் ஆண்டை தமிழ் சினிமாவில் திகில் ஆண்டு என்று குறிப்பிடலாம். அந்த அளவிற்கு திகில் படங்கள் வெளிவந்தது, 200 படங்களில் 50
படங்களுக்குமேல் திகில் படங்கள்தான். யாமிருக்க பயமே, அரண்மனை, பிசாசு, போன்ற படங்கள் ஹிட்டாகவும் செய்தன. அதே போல சின்னத்திரையிலும் திகில் தொடர்கள் ஒளிபரப்பாகி மக்களின் வரவேற்பை பெற்றன.
ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகும் அதே கண்கள், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சிவ ரகசியம், புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனாமிகா உள்பட பல திகில் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இதில் அனாமிகா டப்பிங் சீரியல். இதே போன்று பல திகில் சீரியல்களை ஒளிபரப்ப மற்ற சேனல்களும் முடிவு செய்திருக்கின்றன. முன்னணி சேனல் ஒன்று பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் திகில் தொடருக்கான ஸ்கிரிப்ட் கேட்டிருக்கிறது. சினிமாவுக்கு நிகராக தயாரித்து ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டு அதிகமான திகில் தொடர்கள் ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக