ஜிமெயிலுக்குத் தடை விதித்த சீனா

உலகில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனத்தின் இலவச அஞ்சல் சேவையான ஜிமெயில், சீனாவில் முற்றிலுமாகச் சென்ற வாரம்
தடை செய்யப்பட்டது. எழுத்துரிமை, பயன்பாட்டு உரிமைக்கு எதிராகச் செயல்படும் அமைப்பின் இணையதளமான GreatFire.org என்ற தளத்தில் இந்த தகவல் தரப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவில் தடை செய்யப்பட்டதால், கூகுள் நிறுவனம் தொடர்ந்து வெளியிடும் மின் அஞ்சல் பயன்பாட்டு வரை படத்தில், சென்ற ஒரு வாரமாக, பயன்பாட்டுக்கோடு சரிந்து காட்டப்படுகிறது. ஆனால், சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்த தடை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என அறிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாகவே, கூகுள் நிறுவனத்திற்கும் சீன நாட்டு அரசிற்கும் நட்புறவும், தொழில் ரீதியான உறவும் சரியாக இல்லை. இணையத் தேடல் முடிவுகளைத் தங்கள் அரசு தணிக்கை செய்த பின்னரே, கூகுள் வெளியிட வேண்டும் என்ற சீன அரசின் விண்ணப்பத்தினை, கூகுள் மொத்தமாக மறுத்தது. 2010 ஆம் ஆண்டு, உறவில் ஏற்பட்ட இந்த விரிசல், அதன அஞ்சல் சேவையினைப் பாதித்தது. தன் இயக்கத்தினை சீனாவிலிருந்து, கூகுள், ஹாங்காங் நாட்டிற்கு மாற்றிக் கொண்டது.

ஜனநாயகத்தினை வேண்டி டினாமன் சதுக்கத்தில் நடைபெற்ற போராளிகளைக் கொடூரமாக மரணத்துடன் தண்டித்த 25 ஆம் ஆண்டு நெருங்குகையில், சீனா, கூகுள் நிறுவனத்தின் அஞ்சல் சேவையை நிறுத்தியது. ஆனாலும், சீன மக்கள் அவுட்லுக் டாட் காம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மூலம், ஜிமெயில் சேவையைப் பெற்று வந்தனர். இப்போது அந்த வகை வழிகளும், முழுமையாக, மொத்தமாக அடைக்கப்பட்டு விட்டன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget