உப்பு தண்ணியில் குளிப்பது நலமா

உப்பு தண்ணீரில் குளிப்பதன் மூலம் பல உடல்நல பயன்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உப்பு தண்ணீரில் தொடர்ச்சியாக
குளித்து வந்தால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பயன்களை அளிக்கும். 

• உப்பு தண்ணீர் குளியலில் அதிக கனிமங்களும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும். மெக்னீசியம், கால்சியம், புரோமைட், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உங்கள் சரும துளைகளுக்குள் உறிஞ்சப்படும். இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி தூய்மையாக்கும். 

• உப்பு தண்ணீர் குளியலை தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகள் குறையும். இது சருமத்தை மென்மையாக்கும். இது சருமத்தை கொழுக்க வைத்து சரும நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும். மேலும் தினசரி வாழ்க்கையில் நாம் தொலைத்த சரும பொலிவை இயற்கையான வழியில் கிடைக்க உதவும். 

• உடலிலேயே அதிக அழுத்தம் ஏற்படும் பாகங்களே பாதம் தான். உங்கள் உடலேயே தாங்கி பிடிக்கிறது. தசை தளர்ச்சி மற்றும் செருப்பால் கொப்புளங்கள் கூட ஏற்பட்டு, அதனால் நீங்கள் அவதிப்பட்டு வரலாம். உப்பு தண்ணீரில் குளித்தால், தசை வலியும் விறைப்பும் குறையும். மேலும் பாதத்தில் ஏற்படும் நாற்றத்தையும் போக்கும். 

• உப்பு தண்ணீரில் குளித்து வந்தால் தசைப்பிடிப்பு தொடராமல் இருக்கும். மேலும் கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் விளையாடுவதால் ஏற்படும் காயங்களினால் உண்டாகும் தசை வலிகள் மற்றும் பிடிப்புகளுக்கு சிகிச்சை அளித்திடும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget