சருமத்தை பொலிவாக்க ஜல புல ரகசியங்கள்

உடலினுள் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், அது அப்படியே சருமத்தில் பிரதிபலிக்கும். எனவே சருமத்தின் அழகை வெளிப்புறத்தில் மட்டுமின்றி,
உட்புறத்திலும் பராமரிக்க வேண்டும். இங்கு சோர்வடைந்து இருக்கும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று படித்து தெரிந்து, அதன்படி பின்பற்றினால் நிச்சயம் அழகாக ஜொலிக்கலாம்.

• சருமத்தின் அழகைப் பராமரிப்பதில் தண்ணீர் நிச்சயம் மிகவும் இன்றியமையாதது. தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை அவசியம் பருக வேண்டும். இதனால் செரிமான மண்டலம் சுத்தமாக இருப்பதுடன், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். 

• தயிரில் லாக்டிக் ஆசிட் என்னும் ப்ளீச்சிங் பொருள் இருப்பதால், அதனைப் சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் பளிச்சென்று மாறும். தயிரில் மஞ்சள் தூள் அல்லது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு மாஸ்க் போட வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் சருமம் பொலிவடைவதை காணலாம். 

• ரோஸ் வாட்டர் சருமத்தின் ஈரப்பசையை அதிகரிப்பதோடு, pH அளவை சீராகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள சரும செல்களை வலுவாக்கி, சருமத்தில் முதுமைக் கோடுகள், சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். 

• காபி பொடியில், சிறிது சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தை தேய்த்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இது  சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்தை அழகாக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget