நேச்சுரல் பேஸ் பேக் தயார் செய்வது எப்படி

எலுமிச்சை இலை – 4, 
பயத்தம்பருப்பு, தயிர் – தலா ஒரு டீஸ்பூன்,
கஸ்தூரி மஞ்சள் – அரை டீஸ்பூன் 


(‘ஃபேஸ் பேக்’ போடுவது ஆணுக்கு எனில், கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக சந்தனத் தூள் – அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்), இவற்றை நன்றாக அரைத்தால் கிடைப்பதுதான் ‘நேச்சுரல் ஃபேஸ் பேக்’. 

இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்துக் கழுவினால், அன்று மலர்ந்த தாமரை போல் முகம் ஜொலி ஜொலிக்கும். 

பருக்களால் முக அழகே கெட்டு விடுகிறது என்று கவலைப்படுகிறீர்களா..? 

4 துளசி, 
4 வேப்பந்தளிர், 
கடலை மாவு – ஒரு டீஸ்பூனுடன் 
அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். 

இந்த விழுதை பருக்களின் மேல் போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவுங்கள். தோல் மிருதுவாகி, பருக்கள் மறையும். அடுத்து பருக்களே வராது. டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு அருமையான சிகிச்சை இது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget