பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை

1. யோகாவும், தியானமும் மிகச்சிறந்த வழி. யோகாவினைப் போன்று மனதினை எளிதாக்கும் பயிற்சி எதுவும் இல்லை எனலாம். குறிப்பாக,
மூச்சுப் பயிற்சி மனிதனுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். தியானம் உங்கள் மன உறுதியினை பன்மடங்காக்கும். 

2. புன்னகை புரியுங்கள்: எப்பொழுதும் புன்னகையுங்கள். மனம் தானாகவே மகிழ்ச்சி ஆகிவிடும். அது மட்டுமல்ல. உங்கள் புன்னகை உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக ஆக்கிவிடும். 

3. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆக்கப்பூர்வ எண்ணம் உள்ளவர்களாக இருக்கட்டும். இல்லையெனில், அவர்களது சோகம், தன்னம்பிக்கையின்மை, பயம் போன்ற அழிவுப்பூர்வ எண்ணங்கள் உங்களையும் தொற்றிக் கொள்ளும். 

4. எண்ண ஓட்டத்தினை மாற்றுங்கள் (உ-ம்) இந்த வேலையை முடிப்பதற்குள் என் பாதி உயிர் போய்விடும் என்று எண்ணுவதற்கு பதிலாக இந்த வேலையை சவாலாக நான் முடிப்பேன் என்று எண்ணுங்கள். 

5. சோதனை, வேதனைகளுக்கு இரையாதீர்கள். எதிலும் ஒரு நல்ல வழி உண்டு. அதை மட்டுமே உங்கள் மனம் நாட வேண்டும். 

6. யாருக்காவது தினமும் ஏதேனும் ஒரு உதவி செய்யுங்கள். இது உங்களைப் பற்றி உங்களையே மதிப்பாக நினைக்கச் செய்யும். 

7. உலகில் சாதாரண மனித இனத்தில் எவருமே முழுமையான சரியானவர் கிடையாது. தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளும் பொழுதே மனிதன் மனதால் மனிதன் ஆகிறான். இது உயரும் பொழுது மா மனிதன் ஆகின்றான். 

8. நல்ல பாட்டினை அடிக்கடி கேளுங்கள். நோய் தீர்க்கும், சோகம் நீக்கும், மகிழ்ச்சி கூட்டும். ஆரோக்கியம் கூட்டும் திறன், பாட்டிற்கு உண்டு. அது கர்நாடக இசையாக இருந்தாலும் சரி, சினிமா பாட்டாக இருந்தாலும் சரியே. 

9. உங்களுக்குக் கிடைத்துள்ள சில நல்லவைகளை எப்போதும் நினைவில் வையுங்கள். (உ-ம்) உங்கள் படிப்பு, வேலை, உங்கள் கணவர் (அ) மனைவி? உங்கள் தோட்டம், செடி, உங்கள் நாய்க்குட்டி, மாடு இவை உங்களை எப்பவுமே ஆக்கப்பூர்வமாக வைக்கும். 

10. நல்ல புத்தகங்களை படியுங்கள். தினமும் ஒரு திருக்குறளை பொருளோடு படியுங்கள். நல்ல ஆக்கப்பூர்வ வாசகங்களை ஆங்காங்கே எழுதி தொங்க விடுங்கள். காலை எழுந்திருக்கும் பொழுதே இவற்றினை படிப்பது மனதிற்கு ‘டானிக்’ ஆகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget